18 வகுப்புரிமைப் போராட்டம் கம் தோன் றிய காரணத்தையும் அவசியத்தையும் நன்குணர முடியும். 1915-ல் கல்வி இலாக்காவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518- இடங்களில் அமர்ந்திருந்த, பார்ப்பனர் 399-பேர், கிருஸ்தவர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் 73-பேர், முஸ்லீம்கள் 28-பேர், பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18-பேர் (ஆதித்திராவிடர் உட்பட) 18 ஆம்! அவ்வளவு உத்தியோகங்களிலும் - நாட்டுக்குரிய திராவிட மக்களுக்கு 18 உத்தியோ கங்கள்தான். மக்கள் தொகையில் 100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனருக்கு 399 உத்தியோகங்கள் கிடைத்திருக்கையில், 100க்கு 84 பேர்களாக உள்ள - பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு உத்தியோகங்கள்தான் கிடைத்திருந்தன. பார்ப் பனர்களுக்கு 399 உத்தியோகங்கள்; அவர்களைப் போல் 30 மடங்கு மக்கள் தொகை கொண்ட சமூகத்தாருக்கு 18 உத்தியோகங்கள்தான். இதற்குப் பெயர்தான் அரசாங்கக் கல்வி இலாக்கா" அக்கால நீதிப்படி. 1915-ல்- எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 100 க்கு 7, அல்லது 8-பேரே ஆவர். அதில் 3% வீதம் உள்ள பார்ப்பனரோ தங்களில் 100க்கு 75% விகிதத்துக்குக் குறையாமல் படித்திருந்தனர். மற்ற மக்கள் எல்லோருமே 100க்கு 5% விகிதத்தி னரே படித்திருந்தனர் பார்ப்பனரல்லாத இந்துக் களோ- 100க்கு 3 /.விகிதத்தினர்தான் படித்திருந் தனர். 1914-ம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகம் நடத்திய தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர் எண்ணிக்கை விவரம், அன்றைய நிலைமையைத் தெளிவாக்குவதாகும்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
