22 வகுப்புரிமைப் போராட்டம் மெனவும், அரசாங்கம் அதற்கேற்ப ஆணை பிறப்பிக்க வேண்டுவதோடு, ஆறுமா தங்கட்கு ஒரு முறை அவ்வுத்தரவின்படி ஏற்பட்டுள்ள முன் னேற்றத்தைக் காட்டும் அறிக்கையை இலாக்கா தலைவர்கள் அனுப்பிவைத்து, மேல்சபை உறுப்பி னர்கட்குக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டு மெனவும் தீர்மானிக்கிறது" என்பதே அத்தீர் மானம். 6 அத் தீர்மானத்தின் படியே "அரசாங்கப் பதவிகளில், பார்ப்பனரல்லாதார் பெற்றுள்ள விகிதத்தை உயர்த்த, ரெவினியு இலாக்காவிற்காக - அதன் 128 (2) எண்ணுள்ள நிலையான உத்தர வில், பலதரப்பட்ட வகுப்புகளுக்கும், சாதிகளுக் கும் இடையில், உத்தியோக நியமனங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டிய முறை குறித்து விளக்கப் பட்டுள்ள திட்டத்தை, எல்லாத்தரப் பதவிகட்கும், அரசாங்கத்தின் எல்லா இலாக்காக்களுக்கும் கைக் கொள்ள வேண்டுமென அரசாங்கம் ஆணை பிறப் பிக்கின்றது. எல்லா இலாக்காத் தலைவர்களும் உத்தியோக நியமனம் செய்யும் அதிகாரம் பெற்ற மற்றவர்களும், இது முதல், பதவிகட்கு நியமனம் செய்ய நேரிடும்போதெல்லாம், இத்திட்டத்தை நிறைவேற்றவேண்டுமென்பது அரசின் கட்டளை என்று ஓர் உத்தரவும் 16-9-21-ல் அரசாங்கத் தால் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்பும், அரசாங்க உத்தரவின் நோக்கத்தையும் திட்டத்தையும் தெளிவாக்கும் படி மற்றோர் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த வகுப்பு நீதி உத்தரவு நடவடிக்கை களில் கைக்கொள்ளப் படவில்லை. அரசாங்க உத்தரவின் விளைவைக் காட்டும்படிக் கிடைத்து வந்த புள்ளி விவரக் குறிப்புக்கள், எதிர்பார்த்த
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
