பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்புரிமையை ஒழிக்க காங்கிரஸ் கேடயம் 2B தற்கு மாறாகப், பழைய போக்கிலிருந்து குறிப் பிடத்தக்க மாற்றம்பெறவில்லை என்பதையும், பிற்பட்ட வகுப்புகட்கு இன்னும் சலுகை காட்டப் படவில்லை என்பதையுமே தெளிவாக்கின. வகுப்புரிமையை ஒழிக்க காங்கிரஸ் கேடயம் என்றாலும் இந்த உத்தரவையும் இதன் நோக்கத்தையும் இதற்குக் காரணமான நீதிக்கட் சியையும் எதிர்த்து அக்கால பார்ப்பனப் பிரமுகர் களும் அவர்தம் ஏடுகளும் தூற்றல் பாணம் தொடுத்தனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பார் கட்கென நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட வுடனேயே. அதுவரையில் காங்கிரசில் சேரத் தயங்கிக் கிடந்த பார்ப்பனர்களுங்கூட, தமது 'சுயநலத்தைக் காக்க' அக்கட்சியிலேதான் ஆதிக் கம் பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தோடு, பெருவாரியாகச் சேரத் தொடங்கினார்கள். சுய ராஜ்யத்திற்குப் போராடிய அதே மூவர்ணக் கொடி, பார்ப்பனர்கள் வகுப்புவாத விஷத்தை மறைக்கப் பேருதவியாயிற்று. காங்கிரசின் கதர் போர்வையில் குளிர் காயத்தொடங்கிய ஆதிக்க வகுப்பார், வைக்கப் போரில் படுத்துக் குளிர்காயும் நாய் வைக்கலைத் தின்னவரும் மாட்டினைக்கண்டு குலைப்பதைப் போல, சமூகநீதியைக் காக்கப் பணி யாற்றிய கட்சியினரைக் காயத்தொடங்கினர். காங்கிரசில் புகுந்துகொண்ட பார்ப்பனர்களின் போக்கின் காரணமாகவே, காங்கிரசுக்கும் நீதிக் கட்சிக்கும் இடையில் இலட்சியத்தால் ஏற்பட்ட வேற்றுமை - பகைமையாக வளர நேரிட்டது.