24 வகுப்புரிமைப் போராட்டம் காங்கிரஸ் கேடயம் இருநத அதே சமயத்தில் காங்கிரசில் பார்ப்பனரல்லாத தலைவர்களும், பார்ப்பனர் தேசியப்போர்வையில் புகுந்துகொண்டு, காங்கிர சையே தமக்குக் கருவியாகவும், காங்கிரஸ் பார்ப் பனரல்லாதாரிலேயே பலரைத் துணையாகவும் கொண்டு நீதிக்கட்சியையும் அதன் சமூகநீதி இலட்சியத்தையும் ஒழிக்க முயலுவதைக் கண்டு கொண்டார்கள். எனவே காங்கிரசுக்குள்ளும் பார்ப்பனர்-பார்ப்பன ரல்லா தார் உணர்ச்சி அரும் அ பத்தொடங்கிற்று. என்றாலும் இலட்சிய வேறு பாடு காரணமாக, இரு கட்சிப் பார்ப்பனரல்லா தாரும் ஒன்றுசேர வாய்ப்பில்லை. இதுகாறும், தனித்துமட்டுமே நின்று, இரு வேறு இலட்சியங்களாகிய அரசியல் விடுதலைக் கும், சமூக உரிமைக்கும் பாடுபட்டுவந்த காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ்கட்சியும், இப்பொழுது ஒன்றை யொன்று நேரிடையாகவே எதிர்க்க நேரிட்டது. இருகட்சிச்சார்பிலும் கட்சியே பெரிதென மதித்த -தந்திரமறியாத பார்ப்பனரல்லாதாரே, பெரி மோதிக்கொள்ளலாயினர். பார்ப்பனர் களோ, ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண் டாட்டம் என்பார்களே அதுபோன்ற நிலையெய் தினர் இனம் இரண்டுபட்டது கண்டு. என்றாலும், காங்கிரஸ் பார்ப்பனரல்லா தார் தும் உண்மையை உணரத் தவறவில்லை இதற்கு முன்பும் பின்பும் பார்ப்பன ரல்லாத தலைவர்கள் பலர் தமது கொள்கைக்கும் கருத்துக் கும் செல்வாக்கு இன்மையையும், பார்ப்பனர்கள் கருத்துக்கே செல்வாக்கு இருப்பதையும் கண்டு காங்கிரசைவிட்டு வெளியேறியுள்ளனர்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
