பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" வகுப்புரிமையை ஒழிக்க காங்கிரஸ் கேடயம் 25 1898-ம் ஆண்டிலேயே சென்னையில் நடை பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுத் தொண்டர்படைத் தலைவராகப் பொருப்பேற்றும், அதற்கு அடுத்த ஆண்டில் லக்கௌ மாநாட்டில் சொற்பொழிவாற்றியும், காங்கிரசில் பல ஆண்டு கள் தொடர்புகொண்டுமிருந்த, டாக்டர் டி. எம். நாயர் அவர்கள் காங்கிரசில் பார்ப்பன ரல்லாதார் கருத்துக்குச் செல்வாக்கின்மையைத் தெளிவாகக் கண்டபின்பே அதைவிட்டு வெளியேறியவரா வார். நஈ.வெ.ரா.வின் முதல் முயற்சி இந்த உண்மை, 1924 டிசம்பரில் திருவண்ணா மலையில் நடைபெற்ற, தமிழ்நாடு ஆறாவது காங் கிரஸ் மாநாட்டுத் தலைமை உரையிலேயே காணக் கிடக்கின்றது. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் வேற்றுமை உணர்வு தோன்றுவதற்கு அடிப் படையான காரணங்கள் இருத்தல் வேண்டுமென வும், அதை உணர்ந்து களைய தேசபக்தர்கள் முயற்சிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட மாநாட்டுத்தலைவர். ஈ. வெ. இராமசாமி அவர்கள், காங்கிரஸ் வாதியாயிருந்த டாக்டர்.டி.எம்.நாயர் அவர்கள், திடீரென ஒரு கட்சியைத் தோற்று விக்கக் காரணங்களாய் நின்றவைகள் எவை களோ, அவைகள் இன்னும் நிற்கின்றனவா? இல் லையா? என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. அக் காரணங்கள் அழிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. என்று தெளிவாகக் கூறி யுள்ளார். டாக்டர் நாயர் நீதிக் கட்சியைத் தோற்று விக்கப் பெருந்துணையாக விளங்கிய சர். பி. தியாக ராயரும், காங்கிரசில் பல ஆண்டுகள் தொடர்பு கொண்டு, சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் செயலாளராகவும் இருந்தவர் என்