பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வகுப்புரிமைப் போராட்டம் பதும், சமூக நீதிக்காகவே புது இயக்கம் கண்டார் என்பதும் உணர வேண்டிய செய்தியாகும். காஞ்சி மாநாட்டுக்குப்பின் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்களிலே ஒருவ ராகச் சிறப்புடன் விளங்கிய திரு. ஈ. வெ. ரா. அவர்களும், பார்ப்பனரல்லாதார் நிலையை உணர்ந்து, 1920-ம் ஆண்டிலேயே காங்கிரசு நிர் வாகத்தில் 100-க்கு 50-விகிதம் பார்ப்பன ரல்லா தா ருக்கென ஸ்தானங்கள் ஒதுக்கவேண்டுமெனகேட் கத்தொடங்கி, அதுமுதல் நடைபெற்ற ஒவ்வொரு தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிலும் அத்திட்டத்தை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற முயன்றும், முதலிலெல்லாம் அதை ஒப்புக்கொள்வதாகவும், எழுத்தில் வேண்டாமெனவும் தந்திரமாகத் தட் டித் தட்டிக் கழித்துவந்த பார்ப்பனத் தலைவர்கள், 1925-ம் ஆண்டில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில், "பார்ப்பன ரல்லாதாருக்குச் சரிபங்கு இடம் (50-1. விகிதம்) ஒதுக்கவேண்டும் " என்று திரு. ஈ.வெ.ரா. கொண்டுவந்த தீர்மானத்தைத் தலைமை வகித்திருந்த திரு. திரு. வி க. அவர்க ளைக் கொண்டே அனுமதி மறுக்கச் செய்ததா லேயே, திரு. ஈ. வெ. ரா. அவர்களும், அவரது பார்ப்பன ரல்லாத நண்பர்கள் (திரு S. இராம நாதன் M.A., B.L., அவர்கள் உட்பட) பலரும் காங்கிரசை விட்டு வெளியேறினர். சுயமரியாதைச் சுடர் ஒளி 1926-ல் சுயராஜ்யக் கட்சியின் பேரால், காங் கிரஸ்காரர்கள் தேர்தலில் கலந்துகொள்ளத் தீர் மானித்ததாலேயே, அத்தேர்தலுக்குப் பார்ப்பனர் களையே நிறுத்தி விடுவார்களோ என்ற அச்சத் தால், பார்ப்பனரல்லாதாருக்கும் தேர்தலுக்கு