வகுப்புரிமையை ஒழிக்க காங்கிரஸ் கேடயம் 27 நிறுத்தப்படுவதில் சரிபங்கான இடமேனும் கிடைக்கச் செய்யவேண்டும் என்று கருதியே- 1925-ல் நடந்த மாநாட்டில் திரு. ஈ. வெ. ரா. அவர் கள், அத்தீர்மானத்தை வற்புறுத்துவாராயினர். 501. விகிதம் இடமளிப்பதற்குத் தடை இல்லை என்றாலும், நீதிக்கட்சியின் இக் கொள்கையை- எழுத்தில் ஒப்புக் கொண்டுவிட்டால் இக் கொள்கை வளர்ந்து - பார்ப்பனரல்லாதார் முழு வுரிமையும் பெற முயற்சிப்பார்களே என்ற எண் ணத்தாலேயே பார்ப்பனத் தலைவர்கள் - இதற்கு 'வகுப்புவாதம்' என்ற மகுடம் சூட்டி, மாநாட்டில் நிறைவேற்றவிடாமல் தடுத்தனர். அதன் விளைவாக, வெளியேறிய திரு. ஈ. வெ. ரா. அவர்கள், பார்ப்பனரல்லாத சமூகத்தின் விடு தலைக்காக, சமூக இயல், அரசியல் ஆகிய துறைக ளில் உழைப்பதெனத் தீர்மானித்து, பகுத்தறிவுக் கொள்கைகளில் பற்றுக்கொண்டு, திரு. எஸ். இராமநாதன் அவர்களோடு சேர்ந்து யாதை இயக்கத்தைத்" தோற்றுவித்தனர். வகுப்பு நீதிபற்றி வ.உ.சி. "சுயமரி அதற்குப் பல ஆண்டுகட்கு முன்பே, 1908-ல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, பின் சந்திர பாலர் நடத்திய புரட்சியில் கலந்து-வாழ் நாள் தண்டனை பெற்று, செக்கிழுத்த மறவன், கப்ப லோட்டிய தமிழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், காங்கிரஸ் இயக்கம் நேர்மையற்றவர் கள் கையில் சிக்கியதாலேயே, சிறையினின்று வெளிவந்தபின் ஒதுங்கி இருக்க நேரிட்டது. 1920- ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதி யாகச் சென்ற போதிலும், தலைவர் காந்தியாரின் ஒத்துழையாமைக் கொள்கையோடு மாறுபட்ட தால் -மறுபடியும் ஒதுங்க வேண்டியவரானார்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
