28 வகுப்புரிமைப் போராட்டம் 1927-ல் சேலம் மாவட்ட காங்கிரஸ் மாநாட் டிற்குத் தலைவராக அழைக்கப்பட்டார். அன்று அவர் நிகழ்த்திய தலைமைஉரை -பாரப்பனரல்லா தார் நலத்திற்கு வகுப்பு விகிதமுறை எவ்வளவு அவசியம் என்று அவர் கருதியிருந்தார் என்ப தைத் தெளிவு படுத்துவதாகும். ஸ்தல இராஜாங்க உத்தியோகங்களும் ஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம்தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாருக்கும், அந்தந்த ஜாதியாரின் எண்ணிக் கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமையுண்டாகப் போவதே யில்லை யென்பதும், நமக்குள் ஒற்றுமையுண்டாகா மல் நாம் உண்மையான சுய அரசாட்சி அடையப் போவதே இல்லை என்பதும், மனித அறிவுடைய எவருக்கும் தெளிவாக விளங்கத் தக்கவை. இவ் வுண்மைக்கு மாறாகப் பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர்.' என்று வலியுறுத்திக் கூறியுள்ளார் அவர். அதன் பின்பும் காங்கிரசில் அக்கொள்கைக்கு இடமின்மையைக் கண்டே அவ ருங்காங்கிரசை விட்டுவிலகிப் பின் தமிழ்த்தொண் டிலே தமது இறுதிக்காலத்தைச் செலவிட்டதோடு, சுயமரியாதை இயக்கத்தையும் பாராட்டி ஊக்கு விக்க முன் வந்தார். முத்தையா முயற்சி 1926-ல் நடைபெற்ற தேர்தலில்-சுயராஜ்ய கட்சி (காங்கிரஸ்) பெருவாரியாக வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரசின் கொள்கைப்படி, மந்திரிசபை அமைக்க இணங்கக் கூடாது என்பதோடு-யார் மந்திரிசபை அமைத்தாலும் அதைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே, சுயராஜ்யக் கட்சியின் ஒப் புக்கொள்ளப்பட்ட திட்டமாகும். அப்பொழுது
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
