வகுப்புரிமையை ஒழிக்க காங்கிரஸ் கேடயம் 29 ஜனநாயகக் கட்சியில் முக்கியத்துவம் பெற்று விளங்கிய திரு. எஸ். முத்தையா முதலியார் அவர் கள் - கவர்னர் கேட்டுக்கொண்டும் மந்திரிசபை அமைக்க மறுத்துவிடவே, சுயேச்சைக்கட்சியின ராகிய டாக்டர் சுப்பராயன் அவர்கள் மந்திரி சபை அமைக்க முன்வந்தார், அந்த மந்திரிசபை யில் தங்கள் விருப்பப்படி நடக்கக் கூடிய இருவரை மந்திரிகளாக்கி, சுயராஜ்யா கட்சியினர் ஒத்து ழைக்கத் தொடங்கினார்கள். இது கட்சிக் கொள் கைக்கும் நேர்மைக்கும் முரண்பட்டிருந்ததைக் கண்ட திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள், மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் இதை எடுத்துக் கூறியும் பயனின்மையால், 1927-ஜூன் மாதத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில், அக்கமிட்டியின் உறுப்பினன் என்ற முறையில், "சென்னை மாகாணக் காங்கிரசின் நாணயமற்ற, ஒழுங்கற்ற போக்கு காரணமாக அதன் மீது நம்பிக்கை இல்லை" என்றொரு தீர்மானத்தின் மீது பேச முயற்சித்தார்கள். காங்கிரஸ் ஏதேச்சாதிகாரம் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள், திரு. முத்தையா அவர்கட்குப்பேசவாய்ப்பின்றி செய்து, அத்தீர்மா னத்தைப் பற்றி விசாரித்தறிந்து முடிவுகட்ட ஒரு தனிக்குழுவை அமைத்து, அந்தக்குழு எப்பொழுது கூடுகிறது என்பதேகூட, அதில் ஒருவராக நிய மிக்கப்பட்ட திரு. முத்தையா முதலியார் அவர் கட்குத் தெரிவிக்காமலேயே, "அத்தீர்மானத்தின் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல" என்ற முடிவிற்கு அக்குழு வந்துவிட்டதாகப் பின்னர் அறிவித்து விட்டார்.. அக்குழுவில் நியமிக்கப்பட்டவர்கள். தலைவர் திரு. எஸ். சீனிவாசய்யங்கார், திரு. எஸ்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
