80 வகுப்புரிமைப் போராட்டம் முத்தையா முதலியார், திரு. ஏ. ரங்கசாமி ஐயங்கார், திரு. எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி, திரு.சாமி. வெங்கடாசலம் செட்டி ஆகியோர் ஆவர். இவர்களுள், தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் அறியாமலே, குழு கூடித் தீர்மானத்தை ஒதுக்கிவிட்டது எனில், காங்கிரசில் பார்ப்பன ரல்லாதார் கருத்துக்கும் நேர்மைக்கும் கிடைக்கும் மதிப்பை அறிந்த பின்பும், கடமை உணர்ச்சி யுள்ள எவர்தான் அக்கட்சியில் இருக்க சம்மதிப்பர்? எனவேதான், திரு. எஸ். முத்தையா முதலி யார் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியினின் றும், சுயராஜ்யா கட்சியி னின்றும், 1928-ஆகஸ்டில், வெளியேறி, சட்ட சபையிலேயே ஒரு தனிக்கட்சி அமைப்பாரா யினார். அவர்களைப் போன்றே பிற்காலத்தில் - டாக் டர். வரதராசலு நாயுடு அவர்களும், சில வாண்டு கட்கு முன் - திரு. வி. க. அவர்களும், காங்கிரசை விட்டு வெளியேறினர். அதுபோலவே, நீதிக் கட்சியை முதலில் ஆதரித்து நின்ற ஓரிரு பார்ப் பனத் தலைவர்களும் பின்னால் விலகிக் கொண்ட னர். ஆனால் காங்கிரசில் சேர்ந்த எந்தத் தென் னாட்டுப் பார்ப்பனத் தலைவரும் பின்னர் அதை விட்டு விலகியதில்லை, விலகி யிருப்பினும் மாறு பாடு கொண்டதில்லை என்பதும் அறியத்தக்க தாகும். C கட்சி இவ்வாறு, தெளிவாகவே - நீதிக்கட்சி பார்ப் பனரல்லாதார் கட்சியாகவும், காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாரே பெருவாரியாக இருந்தாலும் பார்ப்பனர் நலக் கொள்கைகளையே ஒப்புக் கொண்ட கட்சியாகவும் உருப்பெற்றன.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
