வகுப்புரிமையை ஒழிக்க காங்கிரஸ் கேடயம் 31 நீதிக்கட்சி வகுப்புரிமையை நிலை நாட்ட முற் பட்டபோதெல்லாம் காங்கிரசே அதை வன்மை யாக எதிர்த்து வந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேல் நாடுகளில் உரிமைக் கிளர்ச்சியும், ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சியும் பூத்தபோது, இந்தியா வில் "சுயராஜ்யக் கிளர்ச்சியும்' (Home Rule Movement) தென்னாட்டில் " சமூக நீதிக் கிளர்ச்சி யும்" தோன்றின. இரண்டும் மோதுதலின்றி இயங்கி இருக்கக் கூடும், சுயநல ஆதிக்கவாதிகள் நுழையாமல் இருந்திருந்தால். போர் முகாம் அமைத்தனர் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து நீதிக்கட்சி யினர் சமூக நீதிக் கொள்கையை வலியுறுத்தவே, பார்ப்பனர் காங்கிரசில் சேர்ந்து நீதிக்கட்சியை வீழ்த்த முயன்றனர். காங்கிரசில் இருந்த பார்ப் பனரல்லாத தலைவர்களில் முக்கியமான சிலரும், அதைவிட்டு வெளிவந்து, காங்கிரசையே எதிர்க் கத்தொடங்கினர். தென்னாட்டுக் காங்கிரஸ், ஒரு பார்ப்பன ஆதிக்கக் கருவி என்ற எண்ணமும் பொது மக்களிடத்தில் பரவியது. நீதிக்கட்சியின் சார்பில் பார்ப்பனரல்லாதார் அமைச்சர்களாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது கண்டதும் அவர்களது ஆத்திரம் வளரவே - நீதிக்கட்சியை ஒழிப்பது தமது பிறப்புரிமை எனக் கங்கணம் கட் டிக் கொண்டு, நீதிக்கட்சித் தலைவர்களை, பதவிப் பித்தர்கள் என்றெல்லாம் தூற்றத் தொடங்கினர். பார்ப்பனரல்லாத தலைவர்களோ, ஆங்கில ஆட்சியை ஒழிக்க வேண்டுமென உரத்துப்பேசி தேசத்தியாகி ஆகி காங்கிரசில் முக்கியத்துவம் பெற்ற பார்ப்பனத் தலைவர் பலரும், தம்பிள்ளை,
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
