பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வகுப்புரிமைப் போராட்டம் மருமகன், உற்றார், உறவினருக் கெல்லாம் அர சாங்க உத்தியோகம் தேடிக்கொடுக்கக்கையாண்ட சூழ்ச்சிகளையும், முறைகளையும் கண்டபோது அதற்குத் துணையாகும் காங்கிரஸ் மீதே வெறுப் புக் கொள்ளலானார்கள். இதனால் இருகட்சி களுக்குமிடையில் பலமான மோதுதல்கள் நிகழ்ந் தன. பிர்மண்ணீய பித்தலாட்டங்கள் ? இந்த மோதுதல்களிலெல்லாம் - வகுப்புத் துவேஷிகளான பார்ப்பனர்- வகுப்புரிமைக்குப் போராடியவர்களை, வகுப்பு வாதிகள், பிராமணத் துவேஷிகள், தேசத் துரோகிகள்-என்று வாறு, பலமான வெறுப்பை உண்டாக்கும் விதத் தில் பலத்த பிரசாரம் செய்து வந்தனர். பல அவர்களது பிரசாரப் போரோ தேசியமே கவசமாகவும், காங்கிரஸ் கட்சியே கேடயமாகவும், தேசியப் பத்திரிக்கைகளே விற்களாகவும், அதி லிருந்து வெளியாகும் செய்திகளும் தலையங்கங் களுமே கணைகளாகவும், ஆதிக்க வெறியே ஊக்க மாகவும், இன ஒற்றுமையே அணியமைப்பாகவும், மக்களின் மெளடீகமே காட்டாணாகவும், பிராமண பக்தியே அகழ் அரணாகவும், வர்ணாஸ்ரம தர்மமே மதில் அரணாகவும், வைதீகமே கோட்டைக் கதவுக ளாகவும், மனு நீதியே கணைய மரமாகவும், வேதா கம இதிகாச புராணங்களே, ரதகஜ துரகபதாதிப் படைகளாகவும், தந்திரமே போர் முறையாகவும் கொண்டு, 'சமூக நீதியை' வீழ்த்துவதே வெற்றி யாகக் கருதி நடத்தப்பட்டது. வெளுத்ததெல்லாம் பால், பிராமணாள் வாயி லிருந்து வந்ததெல்லாம் வேதம், காங்கிரஸ்காரர் சொன்னதெல்லாம் காந்திவாக்கு என்று எண்