4. கம்யூனல் ஜி. ஒ. தோற்றம் அதுமட்டுமன்றி, திரு. முத்தையா அவர்கள் இந்த மந்திரி சபையில் இடம்பெற்ற பின்னர் தான் - நீதிக்கட்சியின் சமூகநீதி இலட்சியம், எளி தில் நிறைவேறும்படியான கம்யூனல் ஜி. ஒ. உத் தரவு, ஓர் உருவான முறையில் பிறப்பிக்கப் பட்டது. என்றாலும், இத்தகைய அரும்பெரும் பணி யாற்றிய - அறிஞர். முத்தையா அவர்களும்கூட 1931-ல் நடைபெற்ற தேர்தலில், திரு. எஸ். இராம நாதன் M.A B.L, அவர்களை எதிர்த்து நிற்கச் செய்து தோற்கடிக்கப்பட்டார். அந்தத் தோல் விக்கும் பார்ப்பனரின் இடைவிடாத கோயபல்ஸ் பிரசார வன்மையும், நீதிக்கட்சித் தலைவர்களின் ஒற்றுமைக் குறைவும், பார்ப்பன ரல்லாதாரின் இனப்பற்றுக் குறைவும், பார்ப்பன ரல்லாதாரின் பிரசார வசதிக் குறைவுமே காரணங்களாகும். இலட்சிய வளர்ச்சி நாட்டப் எனினும், நீதிக்கட்சியின் சமூக, சமத்துவ, சகோதரத்துவ, உரிமைக் கொள்கைகள் இன்று மாற்றுக் கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளதைக் காணும்போது, நீதி நிலை பட்டே தீரும் என்ற உறுதி பிறக்கின்றது-நீதிக் கட்சி பிற்காலத் தேர்தலில் தோற்றாலும், உண் மையில் இலட்சியத்தில் தோற்றுவிடவில்லை என் பதும், மாறாக, அக்கட்சியை இவ்வளவு அடி ஆழத்தில் புதைத்து விட்டோம், எழுந்திருக்கமுடி யாதபடி செய்துவிட்டோம் என்று கூவிய அரசி வெட்டியான்களாகிய சாஸ்திரிகளைத்தான், தேடுமிடம் தெரியவில்லை என்பதும் தெளிவாகின் யல் றது. ஒருவேளை நீதிக்கட்சியைப் புதைத்தது உண் மையானால், அதன் ஆவிதான், இன்றைய ஆள
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
