பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் 35 வந்தாராக இருந்து தம்மை அச்சுறுத்துகின்றதோ என்ற சந்தேகம் அவர்களுக்குப் பிறப்பதில் அர்த்தமில்லையென்று நாம் எப்படிக்கூற முடியும்? குறை, குமுறலாக மாறியது சர்க் 1921-ம் ஆண்டிலேயே சமூக நீதிக்காக, எல்லா வகுப்பார்கட்கும் அரசாங்க உத்தியோகம் கிடைக் கும்படி நியமனங்கள் செய்யவேண்டும் என காரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் (1928- வரையில்) ஏழாண்டு கழிந்த பின்பும்-பிற்படுத் தப்பட்ட வகுப்பாருக்குக் காட்டப்பட வேண்டிய சலுகை காட்டப்படாததால் - பொது எந்த விதத்தும் முன்னேற வாய்ப்பின்றி வெறுப் பும், கொதிப்புமடைந்து குமுறலானார்கள். மக்கள் இந்நிலையில் தான், 1928-ல் சுயேச்சை மந்திரி சபையில் இரண்டாவது அமைச்சராகத் திகழ்ந்த, அறிஞர்.எஸ். முத்தையா முதலியார் அவர்கள் பல ஆண்டுகளாகவே, தென்னாட்டின் அறிஞர் பெருமக்களை யெல்லாம் கவலையுறச் செய்து வந்த இந்தச் சிக்கலான பிரச்சினை குறித்துத் தமது மன உறுதியாலும் அறிவு நுட்பத்தாலும், ஓர் நல் முடிவைக் கண்டார்கள். மாகாண உத்தியோகஸ்தர்களின் (Provin- cial & Sub-ordinate Services) உத்தியோக விதி களை, சிவில் உத்தியோகஸ்தர்கள் டெலிகேஷன் விதிகளின் கீழ் (Civil Services Delegation Rules ) நிர்ணயிக்கும்படி, சென்னை அரசாங் கத்தை இந்திய டொமினியன்காரியதரிசி, (Secre- tary of State for India) கேட்டுக்கொண்டார். இந்த வாய்ப்பைக் கொண்டு ஓம் ஒரே வகுப்பா ரின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள அரசாங்க உத்தி யோக மண்டல வாயிலைத் திறந்து வைத்து எல்லா வகுப்புகட்கும் சமசந்தர்ப்பம் கிடைக்கும்படியான