பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வகுப்புரிமைப் போராட்டம் முறையிலும், சமூக நீதியை நடைமுறையில் நிலை நாட்டத்தக்க விதத்திலும் விதிகளை அமைத்தாக வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் அமைச்சர், முத்தையா அவர்கள். எதிர்ப்பும் ஆதரவும் பலப்பல வகுப்பாரின் நிலைகளையும், எண்ணங் களையும் பல மாதங்கள் வரை, ஆழ்ந்தும் சூழ்ந்தும் சிந்தித்தே முடிவிற்கு வந்தார். அம்முடிவைக் கவர்னரின் ஆட்சிக் குழு உறுப்பினர்களிலேயே சிலர், (Executive council Members) அறியா மையாலும், அகம்பாவத்தாலும் எதிர்த்தபோதி லும், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட மக்கள் எல் லோருடைய முன்னேற்றத்திற்கும், ஒரேவாயிலாக வும் அரணாகவும் அமைந்துள்ள 'கம்யூனல் வினை 1928-ல் அமைச்சர் முத்தையா அரசாங்கத்தின் ஆணையாக்கினார்கள். அவர்கள் மட்டுமே, முதலில் கவர்னரின் ஆட்சிக் குழுவினரி லேயே சிலர் இத்திட்டத்தை ஒப்புக்கொள்ளாத தால் தமது நிர்வாகத்தில் இருந்த ஆவணப்பதிவு (Registration Dept.) இலாக்காவில் முதன் முதலில் நடைமுறையில் கொண்டு வந்தார். இது நடைமுறையில் வெற்றிகரமாக நடப்பதைக் கண்டவுடன் முதலில் இதை எதிர்த்தவர்களும் கூட, சில காலத்திற்குள்ளாகவே, தத்தமது இலாக் காவிலும் நிறைவேற்ற முன் வந்தார்கள். ஆனால் இதற்கும் எதிர்ப்பு ஏற்படாமல் இல்லை. 1928 நவம் பர், 27-ல் சென்னை மேல் சபையில், திரு.சாமி. வெங்கடாசலம் செட்டி அவர்கள் ஓர் ஒத்திவைப் புத் தீர்மானம் கொண்டுவந்தார். "ஆவணப் பதிவு இலாக்காவில் அண்மையில் செய்யப்பட்டுள்ள நியமனம் குறித்து அரசாங் கம் கைக்கொண்டுள்ள முறையையும், பொது நன் து