பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி. ஒ. தோற்றம் 37 மையை நோக்க மிகவும் முக்கியத்துவம் பெற் றுள்ள அத்திட்டத்தையும் குறித்து ஆராய" என்றே அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது மேல் சபையில் நடைபெற்ற விவாதம், வகுப்புவாரி உரிமையை எதிர்ப்பது அதன் நோக்கம் அல்ல என்பதையும், வைஸ்ராய் குழுவின் அனுமதியின்றி சட்டம் செய்ய மாகாண சர்க்காருக்கு அதிகாரம் உண்டா? என்பது குறித் தும், சிறந்த ஊதியமுள்ள பதவிகளுக்கு (Selection grade) உயர்த்தப்படுவதற்கும் அத்திட்டம் செல் லுமா? என்பது குறித்தும் அறியவே கொண்டு வரப்பட்டது என்பதையும் தெளிவாக்கிற்று. 66 க் அத்தீர்மானத்தின் மீது திரு. கரந்த் அவர் கள் (கனம் பிரகாசம் மந்திரி சபையில் அமைச்ச ராக இருந்தவர்) பேசுகையில், நியாயமும் தகுதி யுமான அளவு அரசாங்க அலுவல்களில் தங்களுக் குப் பங்களிக்க வேண்டும் என்ற பார்ப்பனரல் லாத மக்களின் உரிமைக்கு மாறாக நான் எதைக் கூறவும் காரணமில்லை. இந்தச் சபையில் 1921- ஆகஸ்டில் நடைபெற்ற விவாதத்தையும் நான் படித்திருக்கிறேன். சிறப்பாகப் பிற்படுத்தப்பட்ட வர்கள் உண்மையிலேயே அரசாங்க அலுவலில் அதிகமான அளவு இடம் பெற வேண்டும் என் பது முற்றிலும் நியாயமேயானதால் அதனோடு எவ்வித மாறுபாடும் எனக்கில்லை. என்றும் கூறி னார். ஒத்தி வைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த, திரு. சாமி வெங்கடாசலம் செட்டி அவர் களே, "அரசாங்க அலுவலில் இடமே பெறாத வகுப்புக்களுக்கும், குறைந்த அளவே இடம் பெற் றுள்ள வகுப்புக்களுக்கும், நிச்சயமாக வேலை கிடைக்கும்படி இடம் ஒதுக்குவதற்காக அரசாங்