88 வகுப்புரிமைப் போராட்டம் கம் எடுத்துள்ள நடவடிக்கையை எதிர்ப்ப தல்ல தம் நோக்கமென்றும், அந்த வகுப்பு வாரி உத்தர வானது அரசாங்க உத்தியோகங்கள் அனைத்துக் கும் பொருந்தக்கூடிய விதத்தில், நிலைத்த உண் மைகளுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப அமையவேண் டும் என்பதே தம் நோக்கம் என்றும் தெரிவித் தார். இவ்வாறு, ஒத்திவைப்புத் தீர்மானம், விவா தத்தில் ஆதரவுத் தீர்மானமாகவே அமைந்து ஓட் டுக்கு விடப்படாமல், விவாதத்தோடு முடிவுற்றது. அதன் பின்னரே, கம்யூனல் ஜி.ஒ. சென்னை அரசாங்கத்தின் நிரந்தர உத்தரவாயிற்று. இதுவா வகுப்புத் துவேஷம் இந்த வகுப்புவாரி உத்தரவின் வடிவத்தை அறிவதும் அவசியம். அரசாங்கத்தில் நியமனம் செய்ய மொத்தம் 12 உத்தியோகங்கள் உள்ளன வெனில், அவற்றை, இந்து பார்ப்பனரல்லாதாருக்கு பார்ப்பனர்கட்கு முகம்மதியர்கட்கு கிருத்தவர்கட்கு 522 (ஆங்கிலோ இந்தியர் உட்பட) 2 மற்றவர்கட்கு (ஆதித்திராவிடர் உட்பட) 1 என்ற விகிதத்தில் பங்கிட்டளிக்க வேண்டும் என் பதே அவ்வுத்தரவு. இவ்வுத்தரவு பிறந்தவுடன், இது வகுப்புவாத உத்தரவு, பிராமணத் துவேஷிகளின் செயல் என்று தூற்றக் காரணமுண்டா என்று எண்ணிப் பாருங்கள்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
