பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் 39 1921- முதல் 27 வரை நீதிக்கட்சி மந்திரி சபையே முயன்றுங்கூட, ஏதோ சிறிதளவுதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உத்தியோகம் பெற முடிந்ததெனில் -காரணம் என்ன? பெரும்பான் மையோர் முயற்சி பாழாகின்ற அளவுக்கு, சிறு பான்மையினரின் ஆதிக்கம், அரசாங்கத துறை களில் இறுகிப்போய் இருந்தது என்பது தானே ? மற்ற இனத்தவர் நுழைய விடாதபடி, இடம் ஏற்படும் போதெல்லாம், தமது வகுப்பாரையே உள்ளே இழுத்துக்கொண்டனர் என்பது தானே? சத்திரத்துச் சோத்துக்கு சாத்தையங்கார் உத்த ரவா ? என்பது பழமொழி. ஆனால், அரசாங்க உத்தியோகத்துக்கு அய்யர்வாள் அநுக்ரகம் இல் லாவிட்டால் ஆகாது என்ற நிலை ஏற்பட்டது. அநுக்ரகம் யாருக்கு எளிதில் கிடைக்கும் ? எனவேதான் மற்றவர்களுக்கு உரிய இடங் களை யெல்லாம், பார்ப்பனரே ஆக்ரமித்துக்கொள் வதைத் தடுக்கும்பொருட்டும், மற்றவர்கள் நுழைய வழி செய்யும் பொருட்டும் இந்த உத்தரவு அவ சியமாயிற்று. காலியாகும் உத்தியோகங்களில், ஆளுள்ள வரையில், கிடைத்தவரையில், தாங்களே அமர்ந்து கொள்வது என்றிருந்த நிலையை மாற்றி -பன்னிரண்டில் பத்து மற்றவர்கட்கும் உரியது என்ற திட்டத்தை இவ்வுத்தரவு ஏற்படுத்தியது. ஓயாத ஒப்பாரி தது. யில் இதனாலேயே பார்ப்பனருக்கு ஆத்திரம் பிறந் பன்னிரண்டில் ஆறுக்கு மேல் பத்து வரை நிரப்பிக்கொண்டுள்ள எங்களுக்கு இரண்டு தானா ?நாளொன்றுக்கு எட்டு வேளை விருந்துண்ட எங்களுக்கு மூன்று வேளை தானா விருந்து ? என்ற எண்ணத்தால், வேதமோதிகளின் வழிவந்தோர் வேதனையைக் கொட்டிக்கொண்டனர்.