பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் 41 விகிதத்தைக் கவனித்தால் இதை திர்த்திருக்கவேண்டியவர்கள், முறையே-ஆதித் ராவிட மக்களும், பார்ப்பனரல்லாதாருமே என் பது தெரியும் ஆனால் இதனால் யார் அதிக இலா பம் பெற்றனரோ அவர்களே எதிர்க்கும் விசித் திர நிலை பிறந்தது. 'நீதி' அவ்வளவு உருவழிந் திருந்தது. மற்ற மக்கள் கருத்துக் குருடர்களாய், வைதீகச் சேற்றில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந் தனர். புதிய முதலாளித்வம் படி அரசாங்க உத்தியோகம் யார் வேண்டுமானா லும் பெறமுடியாது. தகுதி இல்லாதவனே, வெளி நாட்டானோ எப்படிப்பெற முடியாதோ அதே போல - அரசாங்க உத்தியோகங்களை ஒரு நாட டில் உள்ள ஒரு சிறு கூட்டத்தார் மட்டுமே கைப் பற்றிக் கொள்ளவும் அனுமதிக்கக்கூடாது. அப் அனுமதிக்கப்பட்டால், பெரும்பான் மையோ ரின் உரிமை புறக்கணிக்கப்படுகிறது என்றே பொருள்படும். அத்துடன் பெரும்பான்மையோர் செலுத்தும் வரிப்பணத்தின் ஒரு பகுதி அரசாங்க நடப்புச் செலவின் பெயரால் சம்பளம் மூலமாய், ஒரு சிறுபான்மை இனத்திற்கே - பங்கிட்டளிக் கப்படவும், வரிகட்டும் பெருவாரியான மக்கள் வரி யிலே பங்குபெற உரிமை இருந்தும் அதை இழக் கவும் காரணமாகிறது. அதுமட்டுமன் றிக், “கால் காசானாலும் அரண் மனைச் சேவகம் " சேவகம்" என்ற பழமொழி தெரிவிக் கின்றபடி, அரசாங்க உத்தியோகத்தின் மூலம் பெறக் கூடிய செல்வாக்கையும் உரிமையையும் கூடப் பெருவாரியான மக்கள் இழக்கவும், அந்தச் சிறுபான்மையோரிடம் பெரும்பான்மையோர் அடிமைப்படவும், என்றென்றும் முன்னேற்ற