43 வகுப்புரிமைப் போராட்டம் மின்றி வாடவும் வழியாகின்றது. அதனால் நீதியும் சாய்கின்றது, வகுப்புத் துவேஷமும் வளர இட மேற்படுகின்றது. விளக்கமாகக் அந்நிலையை, ஒரு புது மாதிரியான-முதலாளித் துவம் தோன்றுகிறது என்றுதான் கூறவேண்டும். கூறுவதானால் எனவே தான், சமூக சமத்துவத்தையும், பெரும்பான்மையோரின் உரிமையையும், வகுப்பு நீதியையும் நிலைநாட்ட, இந்த வகுப்புவாரி உத்த ரவு கொண்டுவரப்பட்டது. ஆட்சி செம்மையுற வேண்டுமானால்....? படித்தவர்கள் மூலந்தான் ஒவ்வொரு வகுப் பும், அரசாங்க உத்தியோகத்தில் தனக்குரிய பங் கைப்பெற முடியும். சமூகத்தின் உரிமையைப் பெற கருவிகளாக உள்ள படித்தவர்களை அதிக மாகக் கொண்ட சமூகம் அதிக உரிமையையும், அந்தக் கருவியைக் குறைவாகவே அடைந்துள்ள சமுகம் குறைந்த பங்கைப் பெற்று உரிமையை இழந்திருப்பதும் இயல்பேயாகும். ஆனால் இந்நிலை ஏற்படாதபடி எல்லாச் சமூகங்களிலுள்ளவர்களு சமவிகிதத்தில் படித்தவர்களாகும்படிக் கவனித் துக்கொள்வதும் அரசாங்கக் கடமையாகும். படித்துத் தகுதி பெற்றவர்கள் எல்லோருக் குமே அரசாங்க உத்தியோகம் கிடைக்கமுடியாது. படித்தவர்களில் பாதி பேருக்கோ இன்னும் குறைந்தவர்கட்கோதான் உள்ள உத்தியோகங் களை அளிக்கமுடியும். இந் நிலையில் பல்வேறு வகுப்பினரும், முரண்பட்ட இனத்தினரும் வாழும் ஒரு நாட்டில், ஒரு கூட்டம் (சிறிது) மற்றோர் கூட் டத்தை (பெரிது) அடக்கி ஆள முனையும் ஒரு நாட்டில், ஆட்சி செம்மையாக நடைபெற வேண்டு மானால், வகுப்புகளுக்கேற்ப பதவிகளைப் பங்கிட்டுத் தான் ஆகவேண்டும்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
