கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் 48 இதை உணர்ந்தே, நாட்டிலுள்ள வகுப்புக் களின் மக்கள் தொகை மட்டுமன்றி, அதிலுள்ள படித்தவர்களின் தொகையையும் கணக்கிட்டு, அவ்வகுப்பு முன்னதாகவே அரசாங்கத்தில் பெற் றிருந்த பதவிகளின் அளவையும், இனி படித்தவர் களில் எவ்வளவு விகிதத்தினருக்கு உத்தியோகம் அளிக்கவியலும் என்பதையும் ஒப்பு நோக்கியே, பிற்பட்ட வகுப்புகளுக்கு இடம் கிடைக்கும்படி, வகுப்புவாரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உதாரணமாக 1927-ஆம் ஆண்டில் 100-க்கு 8 பேர் எழுதப்படிக்கத் தெரிந்தவர் எனில், பார்ப்ப னர் 100-க்கு 50-பேரும், பா. அல்லாதார் 100 க்கு 17- பேருமாகவே இருந்தனர். ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர் எனில், பார்ப்பனர் 100-க்கு 17-பேரும் பா. அல்லாதார் 100-க்கு 1-க்கும் குறை வாக- 6) பேருமாகவே இருந்தனர். ஆதித்திராவிட ரிலோ - ஆயிரத்துக்கும் ஒருவராகவோ, அல்லது இன்னும் குறைவாகவோ இருந்தனர். இந்நிலையில் படித்தவர்களில், உத்தியோகத் திற்குத் தகுதியுடையவர்களாக உள்ளவர்களைக் கணக்கிட்டால் - அதில் ஏறத்தாழ 100-க்கு 40- பேர் பார்ப்பனர்களாக இருந்தனர். உத்தியோகத் தகுதியுடையவர்கள் எல்லோருக்கும் அரசாங்கம் உத்தியோகம் அளிக்கமுடியாத நிலையும் ஏற்பட் டது. அவர்களில், 100-க்கு 50-முதல் 60 பேர் வரை யில்தான் உத்தியோகம் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. உதாரணமாக, மொத்தம் 13-உத்தியோகங் கள் உள்ளனவெனில், 22-பேர் போட்டியிட்டனர். அவர்களில் பார்ப்பனர் 10 பேராகவும், பா.அல் லாத இந்துக்கள் 6 பேராகவும், கிருத்தவர் 3 பேரா கவும் முகம்மதியர் 2 பேராகவும், ஆதிதிராவிடரோ
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
