பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வகுப்புரிமைப் போராட்டம் ! இது தான் வகுப்புத்துவேஷமாம் ! ஒரு சிறு வகுப்பாரின் ஆதிக்கத்தைத் தடுத்துப் பெரும் பான்மையோரிள் உரிமையைக் காப்பது வகுப்புத் துவேஷமாம் ! ஆட்சிச்சக்கரம் ஒரு சிறுபான்மை யினரால் - மற்றவர்கள்மேல் உருட்டப்படாமல் பாதுகாப்புத் தேடிக்கொள்வது, வகுப்புத் துவேஷமாம் ! ஒரே ரே வகுப்பார், மிகச் சிறுகூட்டத்தார், பந் திக்கு முந்திக்கொள்வதைப்போலவே, பதவிக்கு முந்திக்கொண்டதும், படிப்பிற்குத் தம் இனத் திற்கு வழிசெய்து கொண்டதும், மற்றவர்களை அங்கு நுழையவிடாமல் தடுப்பதும், உளுத்துப் போன வர்ணாஸ்ரமத்தை அரசாங்காஸ்ரமத்தைக் கொண்டு நிலைநாட்டிக்கொள்ளவும், மற்றவர்களை அடிமைப்படுத்தவும் முயற்சிப்பதும் வகுப்புத் துவேஷமல்லவாம்; அது நீதியாம் ! இந்நிலை பிறந்தபின், தாழ்த்தப்பட்டவர்கட் கும், ஒடுக்கப்பட்டவர்கட்கும், வகுப்புத்துவேஷம் என்று எது கூறப்பட்டாலும், அதுதானே நீதி, நியாயம் என்று தோன்றும். அதன் பின்- என்று 'வகுப்புவாதிகள்' தாங்கள் பட்டம் பெறத்தானே விரும்புவர். திறமைசாலி என்றா லும், முழுப்பூசனியைத் திவசத்துக்குத் தந்த அரிசியிலேயா மறைத்துவிட முடியும் ? எனவே தான் வரிகொடுக்கும் அத்தனை வகுப்பாருக்கும் அரசாங்க உத்தியோகத்தில் பங்கிருக்கவேண்டும் என்ற கொள்கையும், அதற்கான திட்டமும், 'வகுப்புவாதம் என்று கூறப்பட்டாலும், அர சாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. நியாயமும் தெளிவும் இந்தக் கம்யூனல் ஜி. ஓ. வின் கொள்கையில் உள்ள நியாயமும், தெளிவும், 1935-ம் ஆண்டு