பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி. ஒ. தோற்றம் 47 இந்திய அரசியல் சட்டம் 255-வது பகுதி-2-வது பிரிவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. "ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள பப்ளிக் சர்வீஸ் கமிஷன், (Public Service commission) அவ்வப்போது அம்மாகாண உத்தியோகங்களுக்கு (Subordinate civil & Jwdicial service) விண்ணப்பித்துள்ளவர்களிலிருந்து கவர்னரின் கருத்திற்கேற்ப அவசியமாயின் தேர்வுகள் நடத் தியபின் தகுதியுள்ளவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களின் பட்டியலைத் தயாரிக்கவேண்டுமென வும், அதில் உள்ளவர்களிலிருந்து, மாகாணத்தில் உள்ள பலதரப்பட்ட வகுப்புக்களையும் சார்ந்துள் ளவர்களில் எத்தனை எத்தனை பேர் எடுக்கப்பட வேண்டுமோ அந்த விகிதப்படி, நியமனங்கள் நடைபெற வேண்டும்' என்றும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் கம்யூனல் ஜி. ஒ. சென்னை மாகாண அரசாங்க உத்தரவாக மட்டுமன்றி - இந்திய அர சியல் சட்டத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வும் புதிய குடியரசுச் சட்டம் நிர்ணயிக்கப்பட்ட பின்பும் இன்று வரையில் நிலவி வருகின்றதாக வும் உள்ளது என்பதை எண்ணும்போது அதன் நியாயம் விளங்காமற்போகாது. இது எப்படி நியாயமாகும்? 1928-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்தக் 'கம்யூனல் ஜி. ஒ'வினால்' சமூக நீதி'-பிற்காலத் தில் ஏற்படுவதற்கு ஒரு வாயில் காணப்பட்டதே தவிர உடனடியாகப் பலன் விளைந்துவிடவில்லை, எதிர்பார்க்கப்படவுமில்லை. எனினும் சிறுகச் சிறுக, ஆண்டுகள் செல்லச்செல்ல, பார்ப்பனரின் அரசாங்கத்துறை ஆதிபத்தியத்தைக் குறைத்து வரலாயிற்று.