48 வகுப்புரிமைப் போராட்டம் அந்த உத்தரவைப் பிறப்பித்தபோதே, அது உண்மையான பயனளிக்கத் தொடங்க இன்னும் ருபது ஆண்டுகள் கழிய நேரிடும் என்று அறி ஞர் முத்தையா அவர்கள் அறிவித்துள்ளார். அது மட்டுமன்றிச் சென்னை கவர்னராக ஹோப் அவர்கள் இருந்தபோது, "கம்யூனல் ஜி ஜி ஒ என்ற ஒன்று இருந்தபோதிலும், அதற்கு மாறான முறையில், பெரும்பாலான உத்தியோகங்களில், இன்றும் பார்ப்பனர்தானே இடம் பெற்று வரு கிறார்கள்,இது எப்படி நியாயமாகும்?" என்று கேட்கப் பட்டதற்கு, "அந்தந்த உத்தியோகங்களுக்கு என ஏற்படுத்தப்பட்ட தகுதிகளையுடைய மக்கள்-பிற் பட்ட வகுப்புக்களில் கிடைக்காததால், அந்த உத் தரவைச் சரிவர நிறைவேற்றக் கூடவில்லை என வும், 1950-ல் தான் சரிவர நிறைவேற்றக் கூடிய நிலை ஏற்படுமென்றும் " பதில் தெரிவித்திருக்கின் றார். . ஆனாலும் அதுவே ஆதிபத்தியக்காரர்களால், அவர்களின் 'நல்ல மனத்தால்' பொறுக்க முடிய வில்லை. அவர்களின் கோபதாபத்திற்கும், சாபத் தீண்டுதல்கட்கும் குறைவே இல்லை. கம்யூனல் ஜி.ஒ. வும், கருப்புக் கண்ணாடியும்! 1937-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரியதொரு வெற்றிபெற்று சட்ட சபைகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஆட்சியும் ஏற்பட்டது. அதன் தலைவராக, முத லமைச்சராக வந்த திரு. சக்கரவர்த்தி, இராசகோ பாலாச்சாரியார் அவர்கள், ஆட்சிப் பீடம் ஏறிய வுடனேயே இந்தக் கம்யூனல் ஜி. ஒ. வின் மீது தான் தனது கருத்தையும், அதை வெளிக்குக்காட் டாத கருப்புக் கண்ணாடி யணிந்த கண்களையும் திருப்பினார்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
