பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வகுப்புரிமைப் போராட்டம் வகுப்பாருக்கு உத்தியோகம் தரவேண்டுமோ அந்த வகுப்பிலும், அதற்கடுத்த முறையில் வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும், அதற்குத் தேவையான தகுதிகளைக்கொண்டவர்கள் கிடைக்க வில்லை என்று காட்டி அந்த உத்தியோகங்களையும் பார்ப்பன வகுப்பாருக்கேதந்து, பதவிகளில் பார்ப் பனரையே நிரப்பி வந்தனர். இப்படி மற்ற வகுப் பாரில் 'தகுதி ' உள்ளவர்கள் இல்லை யென்று காட்டுவதற்காக, உத்தியோகங்கட்குத் தேவை யான தகுதிகளும் மேலும் மேலும் உயர்த்தப் பட்டே வந்தன. பார்ப்பனர்களைப்போல் மற்றவர்கள் கல்வித் துறையில் (மூன்றில் ஒரு பங்கு அளவு கூட) முன் னேறாத காரணத்தால், உத்தியோகத்திற்கான தகுதிகளை உயர்த்தி அதன் மூலம், குழந்தை கட்கு எட்டாத உயரத்தில் உரியைக் கட்டுவது போல, மற்றவர்கள் நெருங்க முடியாமல் செய்து வந்தனர். கல்வி நீரோடையிலே மேலும், கல்வித்துறையில் மற்ற இனத்தவர் களும் முன்னைவிட அதிகமாகச் சேரத் தொடங்கு வதையும், அதிகமாகத் தகுதி செய்து கொள்ள முயல்வதையும் கண்டவுடன், 'உத்தியோக மண் டல ஆதிபத்தியத்திற்கு' அதனால் ஏற்படக் கூடிய 'ஆபத்தைத்' தடுக்க, "எரிகிற கொள் ளியை இழுத்தால் கொதிக்கிறது அடங்கி விடும்" என்ற நோக்கத்தோடு, அரசாங்கக் கல்லூரிக் ளிலே மற்ற இனத்தவர்களின் நுழைவுக்கு வாயி லாக அமைந்திருந்த 'கல்லூரிக் குழு' (College committees) -வின் மீது 'கருணை'செலுத்தலானார்.