பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் கல்லூரிக் குழு 51 கல்லூரிக்குழு என்பது, பானகல் அரசரின் மந்திரி சபை (1921- முதல் 26 வரை) காலத்தில், கல்வி ஓடையில் வைதீக முதலைகள் நிறைந்திருப் பதையும், மற்ற உயிரினங்கள் நீர்விடாயைத் தீர்த்து வாழ வழியற்றிருப்பதையும் கண்டு, முதலைகளைத் தொலைக்க வழி முறை காணாவிட்டா லும், நீர்த்துறையைச் சுற்றி முள்வேலி அமைப்ப தைப் போல, அரசாங்கக் கல்லூரிகளில் பல வகுப்பு மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளச் செய்யும் அதிகாரம் உள்ளதாக, ஏற்படுத்தப்பட்ட தாகும். ஒவ்வொரு அரசாங்கக் கல்லூரியிலும், அதற் குரிய 'கல்லூரிக் குழு' தான் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அக்குழுவினில், சமூக நீதிக் கொள்கையிலே பற்று கொண்ட டாக்டர். சி. நடேச முதலியார் போன்ற பெரு மக் கள் இடம் பெற்றதால் - கல்லூரிகளில் பார்ப்பன மாணவர் பலர் இடம் பெற்றாலும், மற்ற வகுப்பார் கட்கும் இடம் கிடைக்கும்படி கவனித்துக்கொள் ளப்பட்டு வந்தது. 1920-க்கு முன் ஆசிரியப் பயிற்சி (எல்.டி.) வகுப்பு, பி.ஏ. சயன்ஸ் வகுப்பு, எம். ஏ., வகுப்பு- ஆகியவற்றில், பத்து பார்ப்பன மாணவர்களோடு ஒன்றிரண்டு பார்ப்பனரல்லாத மாணவர்களே படிக்க முன் வந்ததால் - போட்டி ஏற்பட வழியில் லாமல் இருந்தது. அக்காலங்களில் கல்லூரிகளில் பார்ப்பனரும், அல்லாதாரும்-எந்த அளவில் இடம் பெற்றிருந்தனர் என்பதைப் பக்கம் 19-ல் காணலாம். 1920 - முதல் 30-ம் ஆண்டுவரை-பார்ப்பன ரல்லாத மாணவர் விகிதம், பார்ப்பனர் பத்துக்கு