பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வகுப்புரிமைப் போராட்டம் - ஒன்றிரண்டு என்பதிலிருந்து இரண்டு மூன்றாக உயர்ந்தது. பொதுவாகவே படிக்க விரும்பியவர் களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இதனால் கல் லூரிகளில் இடநெருக்கடி சிறிது ஏற்பட்டது. பார்ப்பன மாணவர்கள் எல்லோருக்கும் இடம் அளிக்க முடியவில்லை. ஆசிரியர் பயிற்சி, (எல். டி.) எம்.ஏ., பி. ஏ. சயன்ஸ் போன்ற வகுப்புகளி லும், மருத்துவ, பொறி இயல் கல்லூரிகளிலும் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டி 1930-க்குப் பின் வளர்த்தொடங்கியது. உயர்தரக் கல்லூரிகளில், ஏறத்தாழ நிலை யான அளவே இடமிருக்க -பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டிலும் முன் ஆண்டை விட அதிகமாகச் சேர முன் வந்தனர் என்றாலும் அதைக்காட்டிலும் பார்ப்பன மாணவர்கள் மிகுதியாகச் சேர முயன்றதால் இடநெருக் கடியும் போட்டியும் ஏற்பட்டது என்பது தவறா முதலாண்டில் மொத்த இடங்கள் 10-ல் 7- பார்ப்பனரும் 3- அல்லாதாரும் இருந்திருந்தால், அடுத்த ஆண்டில் 10-பார்ப்பனரும் 4 - அல்லாதா ரும் சேர முயற்சித்ததாலேயே இடநெருக்கடி ஏற் பட்டது என்பது உண்மையாகும். காது. பிராமண கைங்கரியம் பார்ப்பனர்கள், கல்லூரிக் குழு இல்லையா னால் தம் பிள்ளைகள் இன்னும் அதிக இடம் பெறக் கூடும் என்ற ஆசையால் கல்லூரிக் குழுவைக் கண் டிக்கத் தொடங்கினர். கல்லூரிக் குழுவினரோ-கம்யூனல் ஜி.ஒ.வை எடுத்துக்காட்டி, அதன்படி உத்தியோகப் பயிற் சிக் கல்லூரிகளாகிய மருத்துவம், பொறியியல் கல் லூரிகளில் (Professional Colleges) களைச் சேர்ப்பதுதானே நியாயமென்றும், அதன் மாணவர்