பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் 58 படி, பார்ப்பனர்களுக்கு அளிக்க வேண்டிய இடத்தைவிடப் பலமடங்கு அதிகம் அளிக்கப்பட் டிருப்பதையும் எடுத்துக்காட்டினர். அதனால் இந் தக் குழுவையே ஒழித்துவிட்டால், இந்த வாதத் துக்கே இடமில்லை யல்லவா என்று எண்ணிச் செயலாற்ற முனைந்தனர் ஆதிக்க வாதிகள். அதன்படியே, ஆச்சாரியார் ஆட்சியில் கம்யூ னல் ஜி.ஒ.வில் கைவைக்க முடியாதது கண்ட வுடன் - அதன் நிரப்புக்கால் ஆக அமைந்த கல் லூரிக் குழுவை ஒழிக்கும் 'பிராம்மண கைங்கரியம்' நிறைவேற்றப்பட்டது. கல்லூரிக் குழு கலைக்கப்பட்டபின் கல்லூரிக் குழுக்கள் கலைந்தவுடன், கல்லூரித் தலைவர்கள் தம் விருப்பம் போல் மாணவரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற நிலை பிறந்தது. பெரும்பான்மை அரசாங்கக் கல்லூரித் தலைவர் களும் 'அவர்களாகவே' இருந்ததும், இருந்த மற்ற இனத்தவர் சிலரும், அவர்களுடைய ஆதிக்கத்திற் குக் கட்டுப்பட வேண்டியவர்களாகவே இருந்த தும் - ஆதிக்க வகுப்பார் தம் பிள்ளைகளையே உயர் தரக் கல்லூரிகளில் நிரப்பப் பெரிதும் உதவிற்று. கல்லூரிக் குழுவைக் கலைத்ததற்கு எதிர்ப்பு ஏற்படாமல் இல்லை. இது காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதால், இதை எதிர்க்க காங்கிரஸ் கட்சி யினர் முன் வரவில்லை. நீதிக்கட்சியினர் மட்டுமே கண்டித்து வந்தனர். 1940-ம் ஆண்டில், திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாகாண மாநாட்டில் இது குறித்துக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேறியுள்ளது. மாணவர்களைச் "உயர்தரக் கல்லூரிகளில், சேர்த்துக்கொள்ளும் காரியத்தில், சகல வகுப்பு