பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வகுப்புரிமைப் போராட்டம் மக்களையும் சேர்த்துக்கொள்ள சௌகரியமிருக் கும்படியாக, ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலேஜ் கமிட்டியை காங்கிரஸ் ஆட்சி நடக்கையில் எடுத்து விட்டதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, இப் போது ஆட்சியில் இருந்து வரும் கவர்னர் ஆலோ சகர் சர்க்காரும், அதே முறையைப் பின்பற்றி, திராவிட மக்களைக் கைவிட்டதற்காகக் கண்டிப்ப துடன், தக்கதொரு காலேஜ் கமிட்டியை உடனே ஏற்படுத்த வேண்டுமென, இம்மாநாடு வலியுறுத்து கின்றது" - என்பதே அத்தீர்மானம். 1939 அக்டோபரில், ஆச்சாரியார் மந்திரி சபை, காங்கிரஸ் கட்சித் திட்டப்படி, இராஜிநாமா செய்து விலகிக் கொண்டதால், மாகாணத்தில், கவர்னரின் ஆலோசகர் ஆட்சி ஏற்பட்டது. அவ்வாட்சிக் காலத்தில்தான் பார்ப்பனால் லாதார் இயக்கத்தின் தொடர்ந்த வேண்டுகோள் - பிற்படுத்தப்பட்ட மக்களின் குறைகள், காது கொடுத்துக் கேட்கப்பட்டன. கல்லூரிக் குழுக்கள் கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளையும் கண் டுணரலாயினர். எனவே, இழைக்கப்பட்ட அநீதி யைத் துடைக்க, 1942-ம் ஆண்டில்-மருத்துவம், பொறியியல் கல்லூரித் தலைவர்களுக்கு ஒரு அர சாங்க உத்தரவு அனுப்பப்பட்டது. அதன்படி அவ்வுயர்தரக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க் கப்படுகையில் கம்யூனல் ஜி. ஒ. வில் காணப்படும் வகுப்பு விகிதாச்சார முறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டது. மற்றும் உள்ள கல்லூரிகளிலும், மாணவர் சேர்க்கையில், கைவிடப்பட்ட - இடம் பெறாத வகுப்புகளின் நலத்தைப் பாதுகாத்து இடம்