பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் 55 பெறும்படிச் செய்வதற்காக 'கல்லூரிக் குழுக்கள்' ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இக்குழுக்கள் அவ் வப்பொழுதும், தேவைக்கேற்பவும் ஆதிக்கம் பெற் றவர்களின் விருப்பத்திற்கேற்பவும் நடந்து வந் துள்ளனவே தவிர, கம்யூனல் ஜி ஒ. வை கைக் கொள்ளவில்லை. எனினும், மருத்துவம், பொறியியல் கல்லூரி களில், இவ்வுத்தரவின்படி மாணவர்களைச் சேர்க் கத் தொடங்கிய உடனேயே பார்ப்பனர் தொடை தட்டத் தொடங்கினர். கொடுமைக் குள்ளாயினார் யார்? படிப்பதற்குக் கூட பார்ப்பனருக்குத் தடையா? கல்லூரியிலே கூட வகுப்புவாதமா? சரஸ்வதியிடம் கூட சாதிவித்தியாசம் காட்டுவதா? இது அடுக்குமா? நீதியா? இந்தப் படுபாவி அந்நி யர் ஆட்சி ஒழியாதா? என்றெல்லாம் கோபத் திலே பொரிந்து தள்ளினர். உண்மையில், 'பார்ப்பனருக்குக் கல்லூரி வாயில்கள் அடைக்கப்பட்டனவா? எவ்விதத்திலே னும் கொடுமைக் குட்பட்டனரா? அவர்கள் கூவத் தொடங்கிய காலத்தில் எந்த அளவிலே னும் அதில் உண்மை இருந்ததா?' என்று, அறிய விரும்புவோர், அவ்வாண்டுகளில், சென்னை மாகாணத்தில், கல்வித் துறையில், ஒவ்வொரு பார்ப் தரக் கல்வி நிலையத்திலும்,எவ்வளவு பனரும் எவ்வளவு பா. அல்லாதாரும் (திராவிடர்) இடம் பெற்றிருந்தனர் என்பதைக் கேட்டறிந்தால் போதும். மக்கள் தொகையின்படி, சென்னை மக்களில் பார்ப்பனர் 2.7/. சதவிகிதத்தினரே யாவர். அதா