பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வகுப்புரிமைப் போராட்டம் வது மொத்த மக்களில் 37-ல் ஒரு பங்கினர். அவர்களைப் போல் மற்றவர்கள் 36 மடங்கு உள்ள னர். கணக்கிலே சிறிது வேறுபாடு இருப்பினும், பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) பார்ப்பன ரைப்போல் 35 மடங்கிற்குக் குறையாதவர்கள். ஆனால், அவ்விரு வகுப்பாரும் கல்வித் துறையில், எந்த விகிதத்தில் இடம் பெற்றிருந்தனர் என்ப தைக் காணுங்கள். பள்ளியில் ஆதிக்கம் 1943 - 44-ம் ஆண்டின், சென்னை சென்னை மாகாண அரசாங்கக் கல்வி இலாக்காவின் அறிக்கைப்படி, முதல் நிலைப்பள்ளிகளிலே தொடங்கும் முதல் வகுப்பிலிருந்து, நடுநிலைப் பள்ளியையும் கடந்து, உயர்கிலைப் பள்ளியின் இறுதிவகுப்பாகிய எஸ்.எஸ்.எல்.சி. முடிய, ஒவ்வொரு வகுப்பிலும் படித்த ஒரு பார்ப்பன மாணவருக்கு எத்தனைப் பா. அல்லாத மாணவர் படித்துள்ளனர் என்ற விகிதத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், மக்கள் எண்ணிக்கையில் 1-பார்ப்பனருக்கு 35, பா. அல்லாதார், கல்வித் துறை யில் எந் நிலையிலுள்ளனர் என்பது தெளிவாகும். பேராக உள்ள மொத்தத்திலே, பள்ளிகளில் படித்த மாணவர் களில் முதல் நிலைப்பள்ளிகளின் (Primary Schools) முதல் வகுப்பில் நுழைந்த மாணவர் களில், ஒரு பா. மாணவருக்கு, 16 பா. அல்லாத மாணவர் என்ற வீதத்தில் நுழைந்தனர். ஆனால் அடுத்தடுத்த வகுப்புகளில் நிலைமை, முற்றும் மாறியது.