பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வகுப்புரிமைப் போராட்டம் லாதாருக்கு ஒரு பார்ப்பனராக இடம் கொண்டுள் ளனர். . உயர்நிலப் பள்ளியின். தொடக்க வகுப்பாகிய நான்காவது பாரத்திலோ 5 - பா. அல்லாதாருக்கு 3 - பார்ப்பனராக நுழைகின்றனர் இறுதி வகுப்பு (S. S. L. C.) வரையில் மூன்று வகுப்புக்களிலும் உள்ள மொத்த மாணவர்களிலோ 3 - பா. அல்லா தாருக்கு 2 - பார்ப்பனராகப் பெருகியுள்ளனர். உள்ள அரிச்சுவடியிலேயே 36 - மடங்காக இனத்தினர் 16 மடங்கு இடந்தான் பெற்றுள்ள னர். பள்ளியில் நுழையவேண்டிய பாலப் பருவத் திலேயே, பா. அல்லாதாரிலே 100-க்கு 80 பேர்- நுழையவில்லை, வசதி இல்லாததால். அதற்குமேல், வகுப்பு உயர உயர, படிப்பிற்குக் கிடைக்கும் பல னும் உயர்கின்ற வகுப்புக்களில், பார்ப்பனரல்லா தார், மிக மிக வேகமாகக் குறைந்து கொண்டே வருகின்றனர். பள்ளி இறுதி (S. S. L.C) வகுப் பிலோ, பா. அல்லாதார் 3 - பேருக்குப் பார்ப் பனர் 2- பேராகப் பெருத்து விடுகின்றனர். 'அவர்களைப்' போல் மக்கள் தொகையில் 36- மடங்குள்ள வகுப்பு, பள்ளி இறுதி வகுப்பிலேயே, அவர்களைப்போல் 12 மடங்குக்கும் குறைவாகத் தான் இடம் பெறுகின்றது. என்றாலும், கல்வித் துறையில்கூட சாதி வித்தியாசமா? என்று "அவர்கள்" கேட்கிறார்கள், குடிக்கும் நீரைக் கூடக் கலக்குகிறாயா? என்று கீழ்த்துறையில் நீர் குடித்த ஆட்டினைக் கேட்ட ஓநாயைப்போல. பார்ப்பன வகுப்புப் பிள்ளை களிலோ - முதல் வகுப்பில் நுழைபவர்களில் 100-க்கு 80 - பேர் பள்ளி இறுதி வகுப்பை அடைகின்றனர். பா. அல்லாதவரோ, முதல் வகுப்பில் நுழைபவரில் 100 - க்கு 2 - பேர்கூடப் பள்ளி இறுதி வகுப்பை