பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி.ஒ.தோற்றம் 59 எட்டிப்பார்க்கவும் முடியவில்லை. பள்ளிப் படிப்பு முறை பார்ப்பனருக்கு 'ராஜபாட்டையாக' ஆகி யுள்ளது. வழிநெடுக ஆதரவளிக்க, ஆதிக்க வாதி களே ஆசிரியராகவும் உள்ளனர். எனவேதான், 'அவர்களிலே' பத்திலே இரண்டு பழுதின்றி உயர் தகுதி பெறுகின்றது. பா. பா. அல்லாதவர்கட்கோ, பள்ளிப் படிப்பு முறையே 'காட்டுப் பாதையாக' இருக்கின்றது. வழியிலே 'ஆதரவுக்குப்" பதில்' ற்படும் ஆபத்துகள் பல. எனவேதான், பள்ளி யில் அடியெடுத்து வைக்கும்,பா. அல்லாத பிள்ளை கள் நூற்றிலே இரண்டு கூடப் பழுதின்றி உயர் தகுதி பெற வாய்ப்பு ஏற்படுவதில்லை. "பிள்ளை பள்ளிக்குப் போகவும் வேண்டாம், பிரம்படி படவும் வேண்டாம்" என்று தாய் புலம்ப, "பாப்பாரப்பிள்ளையைப் பாரேண்டா, எப்படிப் படிக்கிறாங்கண்ணு! உனக் கெங்கேடா, படிப்பு வரப் போவுது" என்று தகப்பன் கடிய, 'அவன் என்ன செய்வான், எல்லாம் தலை எழுத்துப்படித் தானே நடக்கும்" என்று பாட்டி சமாதானம் கூற, "போகிற போது - பிள்ளையார் கோயிலை ஒரு சுத்து சுத்தீட்டுப் போடா தம்பி" என்று தமக்கை சொல்லி அனுப்ப, இவ்வளவு அர்ச்சனை களையும் குழப்பத்தோடு ஏற்றுக்கொண்டு பள்ளிக் கூடம் செல்லும் பிள்ளை, அங்கேயும், "நீயெல்லாம் ஏண்டா, படிக்க வந்து, என் உயிரை வாங்கிறே, ங்கப்பன் மாதிரி, மாடுகண்ணை ஓட்டிக் பார்க்கப் போறது உணர்விலேயே தானேடா" என்று அவனது ஆசிரியர் கொட்டிடவும் செய்தால், இவ்வளவையும் எதிர்த்து நின்று முயற்சியோடு வெற்றி பெறும் ஆற்றல், அந்த இளம் இதயத்துக்கு எப்படித்தான் ஏற்படமுடியும். எனவேதான், பா. கொண்டு வயலைப் பிள்ளைகள் - கல்வித்துறையில் - அல்லாத அனாதைகளாகி,