60 வகுப்புரிமைப் போராட்டம் என்றோ ஒரு நாள், முதல் வகுப்பிலே இல்லாவிடி னும் பத்தாவது வகுப்பை எட்டிப் பிடிப்பதற்குள்- பள்ளிக் கூடத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர். ஆம்; திராவிட மக்களில் முதல் நிலைப் பள்ளியில் புகுபவர்களில் 100-க்கு 98 பேர், வளர வேண்டிய பள்ளிவயதின் பாலப் பருவத்திலேயே 'சிசு மரணத்திற்கு' ஆளாகின்றனர். ஆனால்- பார்ப்பனப் பிள்ளைகளிலோ பலர் அத்துறையில் வாலிபப்பருவத்தையும் தாண்டிக் களிக்கின்றனர். @ நம் மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஒப்பாக, தொழிற் கல்வியும் வேறு சிறப்புப் பயிற் சியும் அளிக்கும் கல்விக் கூடங்களும் உள்ளன. ஆசிரியப் பயிற்சிப்பள்ளி, மருத்துவப் பள்ளி, தாழில் துறைப்பள்ளி, பொறி இயல்பள்ளி, வாணிபத் துறைப்பள்ளி, குருடுசெவிடு பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் பயிலுகின்ற மாணவர்கள், பார்ப்பனர் 9- பேருக்குப் பா. அல்லாதார் 16 பேர் உள்ளனர். என்ற விகிதத்தில் மொத்த மாணவர்களில், 8393 பேர் பார்ப்பனர்; 14,906 பேர் பா. அல்லாதார். நாட்டு மக்களிலே கல்வித் துறையில், குருடராகவும் செவிடராகவும் ஆக்கப் பட்டுவிட்ட திராவிட சமூகம், அதைப் பிரதிபலிப் பதுபோல, குருடு செவிடு பயிற்சிப் பள்ளியிலே மட்டும் தாராளமாக இடம்பெற்றுள்ளது. அங்கே தான் பார்ப்பனர் 13-பேரும் பா. அல்லாதார் 287 பேருமாகப் [1::22] பயில்கின் றனர். கல்லூரிகளில் மாணவர் அடுத்தாற் போல், கல்லூரிகளிலே பார்த்தால் தொடக்க வகுப்பாகிய, இண்டர்மீடியட்டிலே சேர்ந்துள்ளவர்களில், 20 - பார்ப்பன கட்கு, 21-பர். அல்லாத மாணவர் என்ற விகிதமே காணப் படுகின்றது. ஏறத்தாழ
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
