கம்யூனல்.ஜி.ஒ. தோற்றம் 61 இரண்டு வகுப்பும்-அதாவது, ஒரேசமூகமாகிய ஒரு சிறுபான்மைக் கூட்டமும், பல சமூகங்களைக் கொண்டு நாட்டு மக்களிலே பெரும்பாலோர் (97%) ஆகிய ஒரு இனமும் ஏறத்தாழ சரிசமமாகவே இடம் பெற்றுள்ளன. மேலும்,பி.ஏ.வகுப்புக்களிலே கணக்கிட்டால், 5 - பார்ப்பன மாணவர்கட்கு 4 பா. அல்லாதார் வீத மும், ஆனர்ஸ் வகுப்புகளில் 2 பா. மாணவருக்கு 1.பா.அ.மாணவர் வீதமூம், பி. எஸ். சி., ஆனர்ஸ் போன்ற வகுப்புகளில் 5 பா. மாணவருக்கு 2-பா. அல்லாதார்வீதமும் இன்னும் குறைவாகவுமே இடம் பெற்றுள்ளனர். அவ்வாண்டில் கல்லூரிகளில், 9468 பா. மாணவரும் 8928 பா. அ. மாணவருமே பயின்று வந்துள்ளனர். அல்லாதாரைவிட, 'அவர் கள்' 540 பேர் அதிகம் பயின்றனர். மாகாண மக் கள் தொகையில் 37-லே ஒரு பங்கு உள்ளவர், அவர்களைப் போல் 36 மடங்கு உள்ளவர்கள் பெற் றிருந்த இடங்கள் அளவு மட்டுமேயன்றி, அதை விடக் கூடவும் பெற்றிருந்தனர், உயர்தரக் கல் லூரிகளிலே. மற்றும், உத்தியோகத் தொழில் துறை கல் லூரிகளிலோ எனில், மொத்தத்தில் 44.5/. சத விகித இடங்களைப் பார்ப்பனர் அனுபவித்தனர். 1943-44-ம் ஆண்டில் பா. மாணவரும், பா. அ. மாணவரும், அக் கல்லூரிகளில் எந்த விகிதத்தில் இடம் பெற்றிருந்தனர் என்பதைக் காணுங்கள்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
