கம்யூனல் ஜி.ஓ. தோற்றம் 63 அதன் பயனில் ஆதித்திராவிடர் ஒவ்வொருவரும் அனுபவித்ததைப் போல், 280 மடங்கு அதிகமாக ஆதிக்க வகுப்பினர் ஒவ்வொருவரும் அனுபவித் துள்ளனர். உயர்தரக் கல்லூரிகளில் பயின்ற ஆதித்திராவிடமாணவர்களோ- மொத்தத்தில் 326 பேர்தான். அரசாங்கத்தின் 'ஸ்காலர்ஷிப்' அளிக்கப்பட்டுங்கூட, அதற்கு மேல், அவ்வினத் தால் பிள்ளைகளைப் படிக்க வைக்க இயலவில்லை, வழியில்லை. ஆனால் பார்ப்பனரோ 9468 பேர் படித்தனர். படித்த ஆதித்திராவிடர்களைப் போல் 29 மடங்கு இடம் பிடித்திருந்தனர். பார்ப்பன சமூகத்தில் எந்த (விகிதம்) அளவு பிள்ளைகள். கல்லூரிகளில் பயின்றனரோ, அதே அளவு ஆதித்திராவிட சமூகத்தின் பிள்ளைகளும் பயில்வதானால், 56,808 பேர் படிக்க வேண்டும். அப்படியானால் இப்பொழுதுள்ள கல்லூரிகளைப் போல் மூன்று மடங்கு கல்லூரிகள், ஆதித்திரா விடர்கள் சேர்வதற்கு மட்டுமே வேண்டும். கல்வியும் பொருளாதாரமும் மேலும், கல்விக்காக அரசாங்கத்தால் செல வழிக்கப்படும் 'பொருள்' முழுதும் பொது மக்கள் செலுத்திய வரிப்பணத்தின் பகுதியேயாகும். பொதுமக்கள் என்றால், எல்லா வகுப்பாரும்-ஜாதி, மத, இனவேறுபாடுடைய எல்லோரும் அடங்குவர். வரிப்பணமோ, எல்லா வகுப்பாராலும் செலுத்தப்படுவதால், எல்லோருக்கும் உரிமை யுடையதாகும். எல்லோருக்கும் உரிமையுடைய பொருளைச் செலவழிக்கையில், எல்லோரும் பங்கு பெறும்படிக் கவனிக்க வேண்டும். பிள்ளையார் கோயிலில் உடைக்கப்படும் தேங்காயைப்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/69
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
