64 வதுப்புரிமைப் போராட்டம் போல, சிதறியவழி வலுத்தவன் பொருக்கிக்கொள் ளும்படி விட்டுவிடுவது, பொது மக்களின் வரிப் பணத்தைக் கையாளும் முறையுமல்ல, பொறுப் புள்ள அரசாங்கத்தின் அழகுமல்ல. அ அது மட்டுமின்றி, கல்வித்துறையில் செல வழிக்கப்படும் பொருளால், ஒன்று பத்தாகப் பயன் விளைகின்றது. அந்தப் பெருகும் பயனில், அனைவருக்கும் பங்கிருக்க வேண்டுமானால், கல்விக் கூடங்களிலும், எல்லா சமூகத்தவரும் அவரவர் சமூக மக்கள் எண்ணிக்கை விகிதப்படி இடம் பெற்றாக வேண்டும். அவ்வாறு இடம் பெறும்படி கவனிக்காமலிருப்பது, ஊர் மக்கட்குப் பொது வான வயலில், ஊரார் எல்லோரிடமிருந்தும் விதை நெல் கேட்டு வாங்கி, விதைத்து, விளைந்தவுடன் அவரவர் வலுவுக்கும் திறமைக்கும் ஏற்ப அறுத் துக் கொண்டும், கட்டிக் கொண்டும் போகலாம் என்று அனுமதிப்பதையே ஒக்கும். பொது வய லின் விளைவை யார் வேண்டுமானாலும் அனுபவிக் கலாம், திறமையுள்ளவர்கள் எவ்வளவு வேண்டு மானாலும் கொண்டு போகலாம் என்பதை - நீதி யின் இலட்சணம் தெரிந்தவர்கள் நியாயம் என்று கூறமாட்டார்கள். ஆனால் கல்வித்துறையில் செல வாகும் பொதுப் பணத்தால் விளையும் பெரும் பயனை, ஒரே ஒரு வகுப்பைச் சேர்ந்த மக்களே அனுபவித்து வந்தும் அந்த அநீதி அனேகர் கண் களிலேயே படவில்லை. மேலும், அந்த 'அநீதி யையே' நீதியென்று சாதிக்க வாய்த்திறமை காட்டு கின்றனர் ஆதிக்க வகுப்பினர். வரி கொடுப்போர்க்கு வாழ்வில்லை ! அதுமட்டுமின்றி, அரசாங்க வரியில் பெரும் பகுதியைக் கட்டுகின்ற மக்கள், பெரும்பான்மை
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/70
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
