பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வகுப்புரிமைப் போசாட்டம் வத்தை, கல்விச்செல்வத்திலே திளைப்பவர்கள் கொள்ளையடிப்பது கொடுமையினும் கொடுமை யாகும். சுரண்டல் முறை காணீர் நம் மாகாணத்தில் கல்வித்துறைக்காக அர சாங்கத்தால் செலவழிக்கப்படும் பொருளிலே, எவ்வளவு பங்கு, கல்வித்துறையிலே அவர்கள் பெறும் இடங்கள் மூலமாகப் பார்ப்பனர்க ளால் உறுஞ்சப்படுகிறது என்று பாருங்கள். 1943-44-ம் ஆண்டு கணக்கின்படி முதல் நிலை, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகட்காக அரசாங்கத் தால் செலவழிக்கப்பட்ட 4-கோடி 57-லட்சம் ரூபா யில், 79-லட்சம் ரூபாய், பார்ப்பனர்களால் அனுப விக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 36-ல் ஒருபங்காக உள்ளவர் அதற்காகச் செல வழிக்கப்பட்ட பொருளில் 6-ல் ஒரு பங்குக்கு மேல் அடைந்துள்ளனர். அவர்கள் பெறக்கூடியதைப் போல் 6-மடங்கு கிடைத்துள்ளது அவர்கட்கு. கைத்தொழிற் கல்விக்காகச் செலவழிக்கப் பட்ட பொருளில் 36 சதவிகிதம் அனுபவிக்கின் றனர். அவர்கள் பெறவேண்டியதைப் போல் 13-மடங்கு பெற்றுள்ளனர். கல்லூரிக் கல்விக் காகச் செலவழிக்கப்படும் பொருளிலோ 51.5 சத விகிதம் அவர்களே நுகர்கின்றனர். தமக்கு உரி யதைப்போல் 19-மடங்கு பெறுகின்றனர். உயர்தர உத்தியோகத்துறை தொழிற் கல் லூரிகளிலோ, செலவழிக்கப்படும் பொருளில் 44.5 சதவிகிதம் அடைவதால்- தமக்கு தைப்போல் 16-மடங்கு பெறுகின்றனர். உரிய கல்வித்துறையில், மொத்தத்தில் செலவழிக் கப்பட்ட 7-கோடி 22- இலட்சம் ரூபாயில், 1-கோடி