பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி. ஒ. தோற்றம் 67 32-இலட்சம் ரூபாய் - மொத்தத்தில் 23 சதவிகி தம், (ஏறத்தாழ) பார்ப்பனரால் நுகரப்பட்டுள் ளது. இதில் ஆசிரியர்கள் ஊதியத்திற்கெனச் செலவிடுவதெல்லாம் அடங்குமே என்றால், அப் படி ஆசிரியராக இருந்து ஊதியம் பெறுபவர்கள் ளிலும், பார்ப்பனரே பெரும்பாலோர் என்ப தும், அவ்வழியிலும் தங்கட்குரியதைவிடப் மடங்கு மிகுதியாக அனுபவித்து வருகின்றனர் என்பதும் மறுக்க முடியாததாகும். கணக்கிட்டுப் பாருங்கள் பல் சிறுபான்மைப் பார்ப்பன இனமும், பெரும் பான்மை பார்ப்பனரல்லாத சமுதாயமும் கல்விக் ச் செலவிடப்பட்ட வரிப்பணத்தில் அனுபவித்த விகிதாசாரத்தைக் கணக்கிட்டால், ஒவ்வொரு பார்ப்பன ரல்லா தாரும் அனுபவித்துள்ளதைப் போல் 11-மடங்கு ஒவ்வொரு பார்ப்பனரும் அனு பவித்துள்ளனர்: [அதாவது-பா: பா. அஃ1:10.7 என்ற அளவு] அதுபோலவே, உயர்தரக் கல்வி யிலே பெறும் விகிதங்களைக் கணக்கிட்டால் பார்ப் பனர் அல்லாதார் ஒருவரைப்போல் பார்ப்பனர் 35-மடங்கு பற்றியுள்ளனர் [பா:பா.அ:: 1 : 35.4 என்ற அளவு] கல்வித்தரமும், பயனும் உயர் உயர் அவர்கள் அடையும் பங்கு எவ்வளவு வளருகிறது என்பதையும், அதனால் 'அந்த வகுப் பார்' எய்தும் பலன் எத்தனை மடங்காக உயரும் என்பதையும் ஒரு கணம் எண்ணிப்பாருங்கள் அடுத்த 'கணமே விடை கிடைக்கும் ஒரு பெரு மூச்சின் வடிவிலே. எப்படி நியாயமாகும்? ஒரு நாட்டிலே உள்ள மக்களிலேயே, ஒரு சமூகத்தில் உள்ளவர்களைவிட மற்றொரு சமூகத் தில் உள்ளவர்கள் பொதுவாக கல்வித்துறையில்