பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வகுப்புரிமைப் போராட்டம் 11-மடங்கும், உயர்தரக் கல்வியில் 35-மடங்கும் அனுபவித்திருப்பது எப்படி நியாயமாகும், 'வர் ணாஸ்ரம தர்மக் கொடுமை' என்ற பார்ப்பன நீதி ஒன்றிலே தவிர? என்பதுதான் புரிய வில்லை, நமக்கு. 'அவர்கட்கோ' அந்த அளவி லும் திருப்திகிடையாது. அரசாங்கத்தாரோ, குடியானவனின் தெருக் கடைத் தேங்காயை எடுத்துச்சென்று, அக்ரகாரத் தெரு பிள்ளையார் கோவிலிலே, உடைக்கின்ற முறையிலேயே கல்வித்துறையை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனால், கோதானம் கொடுத்த பசு, பால் நிறையக் கறக்க வில்லையே யென்று தந்தையைப் பறி கொடுத்த மகனிடத்திலேயே குறைபட்டுக் கொண்ட பார்ப்பானைப் போலத்தான், தெருளை யும் உரிமையையும் இழந்து வாழ்விலே தாழ்வுற் றிருக்கும் பொது மக்களிடம் ஆதிக்க வகுப்பினர் தமக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வில்லை என்று கூவுகின்றனர். அவர்கள் கூவுவது, கடைத் தெருக் கூட்டத்தில் கழுத்துமணி அறுத்தவுடன், தான் அகப்படாமல் இருக்க, பக்கத்திலே போகிற ஒருவனைப் பிடித்துப் போலீசிலே ஒப்படைத்த பக்காத்திருடனின் செயலைப் போலத்தான் இருக் கிறது. பக்காத்திருடன் பல நாள் திருடனாக இருக் தாலும் ஒரு நாள் அகப்படத்தானே செய்வான்? அவனது தந்திரமும் திறமையும் 'பத்திரிக்கை யிலே' கூட வெளிவரத்தானே செய்யும்? என் பதை எண்ணித்தான் நமது வேதனை சிறிது மறைகிறது.