சதி ஆரம்பம் பார்ப்பனருக்குப் படிக்கக்கூடத் தடையா? என்ற கேள்வி உச்ச நிலை அடைந்து, பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக அடங்கி வேறு வடிவைத் தேடிப்பெற்று வெளிவரத் தொடங்கிய நிலையில் தான், 1946-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, சென்னை மாகா ணத்தில், ஆந்திரகேசரி பிரகாசம் பந்துலுவின் மந்திரி சபை ஏற்பட்டது. காற்றுள்ளபோதே! பிரகாசம் காரு, காற்றுள்ளபோதே கூட, கொஞ்சம் அவசரப்பட்டே தூற்றிக்கொள்ளும் "திறமையும்," பிராமணாளுக்குச் செய்ய வேண்டிய உபகாரத்தை எப்படியோ செய்து முடிக்கும் "தகு தியும் " கொண்டவர். அவரது மந்திரி சபையையே, பிரகாசம் மந்திரி சபை என்று குறிப்பிடுவதை விட 'தகுதி, திறமை' மந்திரி சபை என்று குறிப் பிட்டால் பொருத்தமாக இருக்கும், அவை இரண் டும் உடையவர் என்று சொல்லப்படுகிறவர்களுக்கு எப்படி அவை இல்லையோ, அப்படியே அந்த மந் திரி சபையும் இருந்த காரணத்தால். அவர் முத லமைச்சர் பீடத்தில் அமர்ந்தவுடனேயே, அவரது மனத்திலே அதுவரை உறுத்திக்கொண்டிருந்த கம்யூனல் ஜி. ஒ. வை, ஒழிப்பதற்கு, என்ன வழி என்று தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கி னார். ஸ்ரீமதி ருக்மணி இலட்சுமிபதி அம்மையவர் களும், மற்றும், ஸ்ரீமான்கள் தென்னேட்டி விசுவ நாதம், வரதாச்சாரி, மதுரை வைத்தியநாதய்யர் முதலியவர்களும், மாணவர்களின் தகுதி, திறமை, பாழாக்கப்படுகிறதெனப் பறைசாற்றத் தொடங் கினர். இந்துவும் மித்திரனும் காகிதக் கணை தொடுக்கலாயினர். புதிய 'பிரச்சாரமும்' ஆரம்ப மாயிற்று.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
