பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 70 வகுப்புரிமைப் போராட்டம் அந்தப் பிரச்சாரம் நடைபெறுகையில், முதல் மந்திரி பிரகாசம் அவர்கள், தமது கருத் தைச் சட்ட சபையிலேயே (1946 -ஆகஸ்டு 20-ம் நாள்) கூறினார். "நான் கம்யூனல் ஜி. ஓ.க்கு எதிரானவன் என்பதை, வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறேன். இதனால் நான் அதை உடனே ஒழித்து விட நினைக்கிறேன் என்று கருத வேண்டாம். உங்களில் பலர் அதனை மிகவும் ஆத ரிப்பதால், நான் அதனை ஒழிக்கப்போவதில்லை. ஆனால் அத்திட்டம் எவ்வாறு வேலை செய்தால் நல் லது என்றுதான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கி றேன்” என்பதே அவர் கூறியது ஆகும். இதிலிருந்து அவர் கம்யூனல் ஜி. ஒ. வின் எதிரி என்பது மட்டுமல்ல, அதனைப் பலர் ஆதரித் ததாலேயே, உடனே ஒழிக்கமுடியாமல், கொஞ் சம் கொஞ்சமாக ஒழிக்க வழி தேடிச் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்பதும் தெளிவாகும். அப்படிப்பட்ட தகுதியும் திறமையும் மிக்க வரின் மந்திரி சபை அமைந்தவுடனே தான், அது வரையில், மருத்துவம், பொறி இயல் கல்லூரிகளில் (சில ஆண்டுகளாக) மாணவர்களைச் சேர்ப்பதில் கையாளப்பட்டு வந்த வகுப்பு விகிதாச்சார முறை காற்றிலே பறக்கவிடப்பட்டது. அக்கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களில் 20-சத விகித மாண வர்கள் 'தகுதி'யின் பேரிலேயே சேர்க்கப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. எல்லா மாணவர்களையும் 'தகுதியின்' பேரிலேயே சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டால் எதிர்ப்பு மிக வேகமாக வளர்ந்திடுமே என்பதை அறிந்த காரணத்தாலேயே அந்த அளவோடு 'தகுதி'க்கு டம் தேடிக்கொண்டார். சட்ட இந்தப் புது முறை தகுதி குறித்துச் கிளம்பியபோது, பதி சபையில் கேள்விகள்