சதி ஆரம்பம் 71 லளித்த கல்வி அமைச்சர், "தகுதி என்பதாவது மாணவன் வாங்கியுள்ள உயர்ந்த அளவு மார்க்கு களே " என்றும், 'இதுவே தகுதியை நிர்ணயிக் கும் சரியான கருவி அல்ல வெனினும், வேறு தக்க அளவு கருவி (மதிப்பீடு) இல்லாதவரை, அரசாங் கம் இதையே கைக்கொள்ள வேண்டியிருக்கின்ற தென்றும்", வெளியிட்டுள்ளார். மாணவர்களின் தகுதியையும், திறமையை யும் கண்டறிய சரியான ஒரு அளவுகோலையே (கருவி) தீர்மானிப்பதற்குமுன், சந்தேகத்திற்குரிய ஒரு அளவுகோலால் அதிக 'தகுதி'யுடையவர்கள் என்று கருதப்படும் மாணவர்களுக்கென, கல்லூரி களில் இடம் ஒதுக்குவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? வகுப்புவாரியாக, வட்டாரவாரியாக மாணவர் களைச் சேர்ப்பதைக் கைவிட்டு 'தகுதி 'யுள்ளவர் கள் என்பதற்காக 20-சதவிகித மாணவர்களைச் சேர்க்காவிட்டால், அத் 'தகுதி' யுடையவர்கள். வகுப்புவாரி உத்தரவின்படி சேர்க்கப்படுகையில் கைவிடப்பட்டா போகிறார்கள்? என்பதும், இத் தகுதியின்' பெயரால் சேர்க்கப்பட்டவர்களில் எந்தெந்த வகுப்பார் எவ்வளவு இடம் பெற்றுள்ள னர் என்பதும் கண்டறிந்தால் உண்மை விளங்கும். 1946-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ள 387-பேரில் (20 சதவிகிதத் தினர்) 67-பேர் ‘தகுதி'யின் பேரால் சேர்க்கப்பட் டனர். அந்த 67-ல் 47-பேர் பார்ப்பனர். மற்றப் படி வகுப்புவீதாச்சாரப்படி சேர்க்கப்பட்டவர்கள் 267-பேர்;-அதில் 49-பேர் பார்ப்பனர்கள். வகுப்பு வீதாச்சாரப்படி பொறுக்குகையி லும், ஒவ்வொரு வகுப்பாரிலும் அதிக 'தகுதி'
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/77
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
