பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதி ஆரம்பம் 78 வும், 'தகுதி'யின் பெயராலேயே 57-இடங்களையும் பிடித்துக்கொண்டு மேலும், மற்ற வகுப்பாருக் குரிய இடங்களில் 26-யும் அவர்களே அடைந்துள் ' ளனர். இவற்றை அறியும்போது 'தகுதிக்கு இடம் அளிப்பதாகச் சொல்லிப் பார்ப்பனருக்கே இடம் பிடித்தனர் என்பது தெளிவாகும். 9 'தகுதியில்' நம்பிக்கையோடு 'திறமையை 'க் காப்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருந் தால், மொத்தத்தில் ஒவ்வொரு வகுப்பாருக்கும் உரிய இடங்களில், அந்தந்த வகுப்பாரும் 'தகுதி' யின் பேரால் அடைந்ததுபோக அவர்களுக்கென மிச்சமுள்ள இடங்களைத் தான் அந்தந்த வகுப்பா ருக்கும் வீதாசாரப்படி அளிக்க வேண்டும் என்றா வது முறை செய்திருக்க வேண்டும். 'தகுதி'யை எந்த நோக்கத்தோடு கொண்டு வந்தனரோ, அந்த நோக்கமே பாழாகிவிடுமே, அவ்வாறு செய்திருந் தால்? அவ்வாண்டில் நடைமுறையில் இருந்த கம்யூ னல் ஜி.ஒ. படி 17 சதவிகிதமே (ஆறில் ஒன்று) இடம் பெற்று வந்த பார்ப்பனர், தகுதிக்கென 20 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதன் மூலம் அதிலே யும் பெரும்பகுதியை அடைவதால், மொத்தத்தில் சுமார் 30 சதவிகிதம் வரை வரை கைப்பற்றியுள்ள னர். இதோ புள்ளி விவரம் இதனை, அவ்வாண்டு, அவ்விரு கல்லூரிகளி லும் சேர்க்கப்பட்ட மாணவர்களின் புள்ளி விவ ரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.