சதி ஆரம்பம் தகுதியும் திறமையும் 75 'தகுதியின் பெயரால் இடம் ஒதுக்கி அதைப் பார்ப்பனர்கள் பிடித்துக்கொள்கின்றனர் என் பது ஒருபுறமிருக்க, அத் 'தகுதி'யேனும் உண்மை யானது தானா, அனைவருக்கும், எல்லா வகுப்பின ருக்கும் பொருந்தக் கூடியதுதானா என்று எண் ணிப்பாருங்கள். "தகுதி" என்பதே தேர்வில் (பரீட்சையில்) வாங்கும் மார்க்குகளைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. அதிக மார்க்குகள் பெற்றவர்கள் அதிக (உயர்ந்த) தகுதியுடையவர்கள் என்பது கருத்து. ஆனால், 'மார்க்குகள்' எப்படி யெல்லாம் பெறப்படுகின்றன என்பதும், பரீட்சை எழுதிய வுடனேயே, மாணவர்களும் பெற்றோரும் மார்க் குப்பெற எத்தனைவித முயற்சியிலே ஈடுபடுகின்ற னர் என்பதும் நாடு நன்கறிந்ததேயாகும். அம்முயற்சியிலே பெரும்பாலோர் ஈடுபட வழி இல்லை யென்றாலும், ஈடுபடும் மக்கள் குறிப்பிடத் தக்க அளவு (பலர்) ஆகலின், அதனால் ஏற்படும் விளைவை ஒதுக்கி விடமுடியாது. வறுமையால் வாழ்வில்லை மக்கள், அம் முயற்சியிலே கூட, ஏழை வெற்றிபெற முடியாது. அதற்கான வாய்ப்போ, வசதியோ, பொருளோ அவர்கட்குக் கிடைப்ப தில்லை. செல்வம் உடையவர்கட்கோ அவர்களின் செல்வாக்கு, அவர் தம் கருத்தைப் பணியாள் மூலம் தெரிவிக்கச் செய்யும் அளவிலேயே, மடங்கு இரண்டு 'மார்க்கு' கேட்டதைப்போல் கிடைத்து விடுகிறது. அது போலவே, கல்வித்துறையில் பின் தங்கி விட்ட சமூகத்தார், யார் பரிசோதகர் (பரீட்சகர்)
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
