76 வகுப்புரிமைப் போராட்டம் என்பதைக்கூட அறிய முடியாது, அறிந்தாலும் நெருங்கவும் வழி கிடைக்காது. படித்து முன்னே றிய சமூகத்தாரோ, யார் பரீட்சகர் என்பதை ளிதிலே அறிந்துகொள்ள முடிவதோடு, அவர் களைத் தங்கள் பந்துமித்திரராகவோ, பள்ளித் தோழராகவோ பெற்றிருக்கக்கூடிய நிலையில், தமது விருப்பத்தை - அன்புக் கட்டளையாகவே மாற்றவும் முடிகின்றது. இந்நிலையில், இத்தவறான பாதை வழி நடந்து பலன் பெறுவது பணக்காரராகவோ, படித்தவ ராகவோ, செல்வாக்குக் கொண்டவராகவோ உள்ளவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சமூகங்களுக்குத்தான், இயல்பாகவும் எளிதாக வும் பலனளிப்பதாகவும் ஆகியுள்ளது. இந்நிலை யில் தான் இன்றைய பார்ப்பன சமூகம் உள்ளது என்பதும், இத்தவறான வழியில் நடக்கவும் அத னால் பயன்பெறவும் அவர்களுக்குள்ள வாய்ப்பை விட மற்ற சமூகங்களுக்குள்ள வாய்ப்பு மிகக் குறைவு என்பதும் மறுக்க முடியாததாகும். பார்ப்பனரும் இனவுணர்ச்சியும் மேலும், பார்ப்பனர் மிகுந்த சாதி உணர்ச்சி யும் இனப்பற்றும் கொண்டவராகவும், கல்வித் துறையில், பெரும்பான்மையினராகவும், பழைய பெருச்சாளிகளாகவும் இருப்பது அந்தச் சமூகத் தார் தங்கள் 'தகுதியை' உயர்த்திக்கொள்ள பெரி தும் உதவுகிறது. கல்வித் துறையிலே அவர்கள் தங்கள் பங்குக்குமேல் பலமடங்கு ஆதிக்கம் பெற் றுள்ளதால் 'அவர்கள்' கைக்கொள்ளும் தவறான பாதையில்கூட ஆபத்து நெருங்காமல் பாதுகாப்பு கிடைப்பதோடு வெற்றியும் கிடைக்கிறது. இந் நிலையை வேறு எந்த ஒரு சமூகமும் இன்று கனவு காணவும் வாய்ப்பில்லை எனில், (மற்றவகுப்பாரை
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
