சதி ஆரம்பம் 77 விட) பார்ப்பன வகுப்பார் பெறும் 'தகுதி'க்கு அர்த்தமில்லை யன்றோ! தமிழாசிரியர்கள் தொண்டு 1 என்று அன்றியும், தம் தாய் மொழியிலே உள்ள பற் றினால், அந்த 'செத்துப்போன'சமஸ்கிருத பாடை யைக் கட்டியழுகின்ற பிள்ளைகளிடத்திலே அம் மொழி ஆசிரியர்களும் பரிசோதகர்களும், மிகுந்த கருணை கொண்டு, நூற்றுக்கு 80, 90 மார்க்கு அளிப்பதையே தருமமாகக் கொண்டிருப் பதும், தமிழ்மொழி ஆசிரியர்களோ, கன்னித் தமி ழைக் கைக்கொளல் எளிதாமோ? என்ற கருத்தி னராய், தமிழ்த் தேர்வு எழுதுபவர்கள், எவ்வளவு தான் சிறப்பாக விடையளித்திருப்பினும் நூற் றுக்கு 50, 60-க்கு மேல் மார்க்கு அளிக்காமல் இருப்பதையே தமது தமிழ்த் தொண்டாகக் கொண்டிருப்பதும் மாணவர்களின் உண்மைத் 'தகுதியை' மறைத்துவிடக் காரணமாகிறது. இதனா லும், பெருவாரியாக, சமஸ்கிருதம்படிக்கும் பிள்ளை களைக் கொண்ட பார்ப்பன சமூகத்தார் மற்ற வகுப்பாரைவிட அதிக 'தகுதி' பெற்றவர்களாக காட்டிக்கொள்ள முடிகிறது. அதற்காக தமி ழையோ, வேறொரு மொழியையோ தாய் மொழி யாகக்கொண்ட மக்கள், தம் 'தகுதியை' உயர்த் திக்காட்ட சமஸ்கிருதத்தையா படிக்க முடியும் ? பரம்பரைப் பண்பு நூறு மேலும், பரம்பரை பரம்பரையாக பல் ஆண்டுகளாகப் படிப்பதையே (ஓதுவ தையே) கடமையாகவும், தூது நடப்பதையே தொழிலாகவும், உத்தியோகம் பார்ப்பதையே தர் மமாகவும் கொண்டு தமது புத்திக்கு மட்டுமே வேலை ஏற்படும்படியான ஒரு தந்திர ஏற்பாட்டைச் செய்துகொண்ட சமூகத்தாருக்கொப்ப, ஏர்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/83
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
