78 வகுப்புரிமைப் போராட்டம் பிடிப்பதையும், துணி நெய்வதையும், வாணிபம் செய்வதையும், வளம் பெருக்குவதையுமே கடமை களாகக் கொண்டு, உடல் உழைப்பையே நம்பிக் கிடந்த நயவஞ்சகமறியாத மற்றோர் சமூகம், படிப் புத்துறையில் எப்படித் தகுதிபெறமுடியும்? தனிப் பட்டவர்களையல்ல நாம் குறிப்பிடுவது. நாம் அறி வோம் எந்தத் துறையை எடுத்துக் கொண்டா லும், அத்துறை ஒவ்வொன்றிலும் எவரேனும் ஒரு பா. அல்லாதாரே, சிறப்புற்றுத் திக ழும் அறிவாற்றல் மிக்கவராக விளங்குகிறார் என்பதை. ஆனால் சமூகங்களின் தராதரத்தை, அதன் இயற்கைச் சிறப்புக்களைக் கொண்டு ஒப் பிட்டுப் பார்க்கும்போதுதான், இயல்பினால், பண் பினால் இரு வேறு துருவங்களாக உள்ள அவ் விரண்டு சமூகங்களுக்கும் ஒரே அளவு கருவி கொண்டு 'தகுதியை'த் தீர்மானிப்பது எப்படி முறையாகும் என்றும், அத்'தகுதி'யைக் கொண்டு உரிமையளிப்பது எப்படி நியாயமாகும் என்றும் கேட்க வேண்டியிருக்கின்றது. பரம்பரை பரம்பரையாக, வேதமானாலும் எதுவானாலும், பொருள் தெரிந்தோ தெரியா மலோ நெட்டுருபோட்ட மூளையைக் கொண்ட சமூகத்தோடு, அறம் பொருள் இன்பத்தை இயல் பான வாழ்க்கையிலே கடைப்பிடித்து மனத்தி னாலே பண்பட்ட சமூகம், இன்று (இந்நூற்றாண் டில்) ஏட்டுப் படிப்பைத் தொடங்கிய அளவிலே எப்படிப்போட்டி இட்டுத் தகுதிபெற. முடியும்? மூளைப் பயிற்சியே மிகுந்துள்ள கூட்டம், மூளைக்கு மட்டுமே வேலை தரும் இன்றைய பரீட்சை முறை யிலே பெறும் தகுதியை மற்றவர்கள் பெறவேண் டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
