பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதி ஆரம்பம் 79 12 மனுநீதியின் விளைவு அத்துடன், "பிராமணர்கள்தான் படிக்க லாம், ஓதலாம். குருவாகலாம், அது அவர்கள் கடமை. மற்றவர்கள் படிப்பதே பாபம். சூத்திரர் கள் வேதத்தைப் படித்தால் படித்த நாவை அறுக்க வேண்டும்; வேதம் படிப்பதைக் கேட்டால் கேட்ட காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண் டும்; தவஞ் செய்தால் (சிந்தனையில் ஆழ்ந்தால்) தலையையே வெட்டிவிடவேண்டும்," என்று கூறும் வர்ணாஸ்ரம மனுநீதியை நாட்டிலே புகுத்தி, மற்ற வர்களை யெல்லாம் அதை நம்பி ஏமாறும்படிச் செய்துவிட்டு, (சூதான நோக்கத்தோடு ) தாம்மட்டுமே கல்விகற்ற கூட்டத்தோடு, படிப் பையே ஒரு தொழிலெனக்கொண்டு பார்ப்பன ரிடத்திலே அதை ஒப்புவித்துவிட்ட பாமரர் கூட் டம் எப்படிப் போட்டியிட்டுத் தகுதி' பெறமுடியும், அவர்களுடைய மனக்கருத்து மாற்றமடைந்து தன்னம்பிக்கை பிறக்குமுன். வர்ணாஸ்ரம தர்மம், அதன் வேரோடும் விழு தோடும் சாய்க்கப்பட்டு, மண்ணோடு மண்ணாக ஆக் கப்பட்டு, சாதியின் நாற்றமோ, உயர்வு தாழ்வின் வாடையோ வீசாமல் ஒழிக்கப்பட்டு, பார்ப்பன ரல்லாத வகுப்பாரின் 'தாழ்வு' மனப்பான்மை' நீக் கப்படாதவரை பார்ப்பன மாணவர்கட்கும் மற்ற வர்கட்கும் ஒரே அளவைக் கொண்டு 'தகுதி'யைத் தீர்மானிப்பது எப்படி நீதியாகும்? வசதியும் தகுதியும் மேலும், பார்ப்பன மாணவர்கட்குப் படிப்ப தற்குக் கிடைத்துள்ள வசதிமிக்க சூழ்நிலை மற்ற வகுப்பாருக்கு இல்லாமலிருக்கவும், தாழ்த்தப் பட்ட வகுப்பாருக்கோ, படிக்க எவ்வித வசதி