80 வகுப்புரிமைப் போராட்டம் யுமே இல்லையாகவும். அம்மூவரும் எப்படி ஒரே 'தகுதியை'ப் பெறமுடியும்? தமிழர் நிலை காணீர் அட்வகேட் அனந்தாச்சாரியின் மூன்றாவது மகன் சந்தானம் இண்டர்மீடியட் வகுப்பிலே படிக்கிறான்; அவனது பெரிய அண்ணா பட்டாபி ராமன் ஒரு டாக்டர்; தமக்கை சீதாலெட்சுமி ஒரு பி. எ. பட்ட தாரி; சின்ன அண்ணா ரங்கசாமி என் ஜினியரிங் காலேஜில் படிக்கிறான். வக்கீல் குமாஸ்தா கோவிந்தசாமிப் பிள்ளை யின் இரண்டாவது மகன் சண்முகமும் இண்டர் மீடியட் வகுப்பிலே தான் படிக்கிறான். அவன் அண்ணன் ஆறுமுகம் எஸ். எஸ். எல். சி. பாஸ் செய்து விட்டு தபாலாபீஸில் கிளார்க்கு வேலையில் இருக்கிறான். அவன் தங்கை சரஸ்வதியோ, நான் காம் வகுப்போடு பள்ளிக்கூடத்தை விட்டு விட்டு, மணப்பருவத்தை எய்தி வீட்டிலே இருக்கின்றாள். இன்னும் சின்னத்தம்பியும் தங்கையும் வேறு உண்டு. கூலி வேலை செய்து வயிறு கழுவும் குப்பன் மகன் இரத்தினமும் கூட (ஆச்சரியந்தான்) இண் டர் மீடியட் வகுப்பிலே படிக்கிறான். அவனது தாய் புல்லறுக்கப்போவதும், தமக்கை வக்கீல் வீடு கூட்டப்போவதும். தம்பியும் தங்கையும் வேளைக்கு வேளை உணவுக்கு வாடி வருந்திக்கிடப்பதும் - அவ னது குடும்பத்தின் அன்றாட 'வாழ்க்கை'. தகப் பன் எப்பாடுபட்டோ தன்னைப் படிக்க வைக்க முன் வந்த காரணத்தால், அரசாங்க ஸ்கா லர்ஷிப் உதவி கொண்டு, தட்டுத்தடுமாறி இண்டர் மீடியட் வகுப்பிலே படித்து வருகிறான். மூன்று சமூகங்களைச் சேர்ந்த மூவரும் ஒரே வகுப்பிலே, ஒரே கல்லூரியிலே படித்தபோதிலும்,
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
